பெங்களூரு: 'பில்களில் பிடித்தம் செய்யப்பட்ட 25 சதவீத தொகையை விடுவிக்க வேண்டும் உட்பட ஒன்பது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், ஜூன் 10ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என பெங்களூரு ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.பெங்களூரு நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல பணிகளுக்கு, மாநகராட்சி பணம் செலுத்த ஒப்புதல் அளித்தும், இன்னும் வழங்காததை கண்டித்து, மே 27ம் தேதிக்குள் நிலுவை தொகையை வழங்கவில்லை என்றால், வளர்ச்சி பணிகள் நிறுத்தப்படும், என்று மே 2ம் தேதி எச்சரித்திருந்தனர்.இதையடுத்து, நேற்று ஒப்பந்தாரர்கள் சங்கத்தினருடன், மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத் கூட்டம் நடத்தி, அவகாசம் தரும்படி கேட்டு கொண்டார்.இது தொடர்பாக சங்க தலைவர் நந்த குமார் கூறுகையில், ''எங்களின் ஒன்பது கோரிக்கையை ஒரு வாரத்தில் நிறைவேற்றுவதாக, மாநகராட்சி கமிஷனர் அவகாசம் கேட்டு உள்ளார். நிறைவேற்றவில்லை என்றால், ஜூன் 10ம் தேதி முதல் அனைத்து பணிகளையும் நிறுத்துவோம் என்று அவரிடம் கூறியுள்ளோம்,'' என்றார். கோரிக்கைகள் என்ன?
பில் தொகை வழங்குவதை 25 மாதங்களில் இருந்து 10 மாதங்களாக குறைப்பது பில்களில் பிடித்தம் செய்யப்படும் 25 சதவீதம் தொகையை வழங்குவது தர காப்பீடு துறையின் தலைமை பொறியாளர்கள் தொல்லையை தடுப்பது மண்டல தொழில்நுட்ப ஆலோசகர்கள், ஆய்வு செய்து, பதிவு செய்வது மண்டல தலைமை பொறியாளர்களுக்கு பதிலாக, மத்திய அலுவலகத்தில் இருந்து பில் தொகை வழங்குவது டி.வி.சி.சி., எனும் கமிஷனர் கீழ் செயல்படும் தொழில்நுட்ப விழிப்புணர்வு பிரிவு பணிகளை பரிசீலிக்க கூடாது கட்டட பணிகளில் ஈடுபடுவோருக்கு, பில் தொகையை நிறுத்தாமல் வழங்குவது 50 லட்சம் ரூபாய் வரையிலான பணிகளுக்கான ஒப்புதலை மண்டல முதன்மை பொறியாளர் வழங்குவது கே.ஆர்.ஐ.டி.எல்., எனும் கர்நாடக கிராம உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவன பணிகளை, டி.வி.சி.சி., பார்வையிடாமல், பில் தொகையைவழங்குவது.