உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு வனப்பகுதியில் கேமரா பொருத்த முடிவு

பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு வனப்பகுதியில் கேமரா பொருத்த முடிவு

பெங்களூரு: பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்ய, கர்நாடக வனப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இந்தியா உட்பட உலகம் முழுதும் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டு, பல்வேறு விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன.இதனால், பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்வதற்கு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இதற்காக, யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளின் வனப்பகுதியில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. இங்கு அடர்ந்த வனப்பகுதிகள், பல்வேறு அரிய உயிரினங்கள் வாழ்விடமாக இருப்பதால், மத்திய அரசு, கர்நாடகாவை தேர்வு செய்துள்ளது. மாநிலத்தின், நாகரஹொளே, தாண்டேலி, ஷிவமொகா உட்பட சில வனப்பகுதிகளில் தற்போது ஆரம்பிக்கும் ஆய்வு, ஐந்து ஆண்டுகள் வரை மேற்கொள்ளப்பட உள்ளது.ஆய்வுக்காக, வனத்தின் குறிப்பிட்ட இடைவெளியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த மாதத்திற்குள் கேமராக்கள் பொருத்துவதற்கு இடம் நிர்ணயிக்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்கு, 2.19 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.மழை, வெயில் என அந்தந்த பருவ காலங்களில் கேமராவில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில், பருவ நிலை மாற்றம் குறித்து, தனி ஆய்வு மையம் அமைத்து, 365 நாட்களும் 24 மணி நேரமும் ஆய்வு நடத்தப்பட உள்ளது.விவசாயம், தோட்டக்கலை, மின்சாரம், நீர்ப்பாசனம் உட்பட 42 மத்திய, மாநில அரசு துறைகள் ஆய்வில் ஈடுபட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

G.Kirubakaran
மே 14, 2024 10:07

மரங்களை வெட்டினால் கடும் தண்டனை கொடுங்கள் ஒரு ஆளுக்கு ஒரு மரம் நட்டு பராமரிக்க, உத்திரவு விட வேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை