உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 140 கோடி இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்: என்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

140 கோடி இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்: என்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது 140 கோடி இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்' என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.கடந்த 2019ல், ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி சென்ற போது, அந்நாட்டின் உயரிய விருதான, 'ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர்' வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதிபர் மாளிகை விழாவில், 'ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர்' விருதை, நேற்று பிரதமர் மோடிக்கு வழங்கி புடின் கவுரவித்தார்.

140 கோடி இந்தியர்களுக்கு பெருமை

இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு இந்த நேரத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது 140 கோடி இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம். இந்த விருதை பிரதமர் ஏற்றுக்கொண்டார். இந்த விருதை பெறும் முதல் இந்தியர் பிரதமர் மோடி. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Narayanan Muthu
ஜூலை 10, 2024 19:57

இதெல்லாம் ஒரு பெருமை பீத்தல்.


அப்புசாமி
ஜூலை 10, 2024 19:15

மோடி சொல்லி போரை நிறுத்தியிருந்தா 140 கோடி பேருக்கு பெருமைங்கலாம். அவன் மெடல்னா குத்தி அநுப்பிச்சுட்டான்.


hari
ஜூலை 10, 2024 18:40

உண்மை.... சில கழுதைகளுக்கு தெரியாது...... வாசனை


Ramesh Sargam
ஜூலை 10, 2024 17:39

140 கோடி இந்தியர்கள், மைனஸ், ஒருசில எதிர்கட்சியினர்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை