உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டி.யு.,வில் இன்று முதல் மாணவர் சேர்க்கை

டி.யு.,வில் இன்று முதல் மாணவர் சேர்க்கை

புதுடில்லி:வரும் கல்வி ஆண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையை இன்று முதல் டில்லி பல்கலைக்கழகம் துவங்குகிறது.பல்கலைக்கழகம் வெளியிடப்பட்ட சேர்க்கை அட்டவணையின்படி, முதுகலை பட்டப்படிப்புகளுக்கான முதல் சுற்று இடஒதுக்கீடு இன்று வெளியிடப்படுகிறது.முதல் சுற்று மாணவர் சேர்க்கை இன்று மாலை 5:00 மணிக்கு பொது இடஒதுக்கீட்டு முறைப்படி நடைபெற உள்ளது. இடம் ஒதுக்கீடை ஏற்க மாணவர்களுக்கு, வரும் 27ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. 28ம் தேதி மாலை 4:59 மணிக்குள் தங்கள் படிப்புக்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.அடுத்தக்கட்ட மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு ஜூலை 2ம் தேதி தொடங்கி, ஜூலை 11ம் தேதி வரை நடைபெறுகிறது. மூன்றாவது சுற்று இட ஒதுக்கீடு ஜூலை 16ல் துவங்கும். கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி ஜூலை 21ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை