உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்களுக்கு ஜிவனாம்சம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்களுக்கு ஜிவனாம்சம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விவாகரத்துக்கு பிறகு, இஸ்லாமிய பெண் தனது கணவரிடம் இருந்து ஜிவனாம்சம் பெற்றுக் கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஜிவனாம்சம் வழங்க வேண்டும் என தெலுங்கானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, இஸ்லாமிய நபர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஜூலை 10) நீதிபதிகள் நாக ரத்தினம் மற்றும் அகஸ்டின் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இஸ்லாமிய நபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''இஸ்லாமிய பெண் ஜிவனாம்சம் கேட்பது, விவாகரத்து தொடர்பான உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1986ன் படி முடியாது'' என வாதிட்டார். இதனை ஏற்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர். தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜிவனாம்சம் அளிப்பது தொண்டு போன்றது ஒன்றும் அல்ல. அது திருமணமான பெண்ணின் அடிப்படை உரிமை. மதங்களைக் கடந்து, பாலின சமத்துவத்தைக் கொண்டு வரவும், பெண்களும் பொருளாதார பாதுகாப்புப் பெறவும் இது வழிவகை செய்கிறது. சட்டப்பிரிவு 125 ஆனது, திருமணமான பெண்களுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தக்கூடியது. மனைவியின் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது கணவனின் கடமை. அவர்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய ஜாயின்ட் வங்கிக்கணக்கு, ஏடிஎம் வசதி செய்து தரப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இஸ்லாமிய நபர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

பேசும் தமிழன்
ஜூலை 10, 2024 18:49

அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய தீர்ப்பு .... ஆனால் நம்ம தமிழக ஆர் எஸ் பாரதி ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்வார்கள்..... ஏனென்றால் அவர்கள் விலை போனவர்கள்..... தினமலர் மட்டும் அதற்க்கு விதிவிலக்கு !!!


kumarkv
ஜூலை 10, 2024 18:26

இத்தனை நாளாய் பெண்களுக்கு இழைத்த அநிதி.


தத்வமசி
ஜூலை 10, 2024 18:18

அதனால் தேவை பொது சிவில் சட்டம். இது காலத்தின் கட்டாயம். பிரிடிஷ் மற்றும் காங்கிரசின் பிரித்தாளும் சூழ்ச்சியால் உருவான சட்டங்களை முழுதுமாக நீக்க வேண்டும். இந்தியாவுக்கு என பொதுவாக "ஒரு சிவில் சட்டம் - ஒரே நாடு ஒரே மக்கள்" சட்டம் கொண்டு வர வேண்டும். இவனுக்கு ஒரு சட்டம், அவனுக்கு ஒரு சட்டம் என்பதையெல்லாம் நீக்க வேண்டும். இதை உச்சநீதிமன்றமே முன்னெடுக்க வேண்டும். அதை அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டும்.


வாய்மையே வெல்லும்
ஜூலை 10, 2024 16:54

அய்யகோ சும்மா இருந்த சங்கை ஊதி பெருதாக்கிட்டாங்களே இந்த உச்ச நீதிமன்றம் ஆட்கள் என சிலபேரின் மைண்ட் வாய்ஸ் "அமைதியாக" சொல்லும். இவனுங்களுக்கு தேவை என்றால் ஒன்னு என்ன நாலு கட்டுவானுங்க.. பிடிக்கலேன்னா தலாக்கு சொல்லிட்டு ரைட்டு காட்டிட்டு இன்னொருத்திகிட்ட பாசம் பொழிய பூடுவானுங்க . என்னய்யா உங்க நியாய தர்மம். ??


vijay
ஜூலை 10, 2024 16:45

இந்த தீர்ப்பினை பற்றி எந்த அரசியல் கட்சியாவது பாராட்டி கருத்து தெரிவித்தார்களா .....செய்ய மாட்டார்கள் . ஏன் என்றல் சிறுபான்மை ஒட்டு பொய் விடும் என்ற பயம் தான் காரணம் . வெட்கம் கெட்டவர்ககள்.


பேசும் தமிழன்
ஜூலை 10, 2024 18:50

அப்படிப்பட்ட கட்சிகளுக்கு பெரும்பான்மை மக்களும்.... முஸ்லீம் பெண்களும் ஓட்டு போட கூடாது.


Jai
ஜூலை 10, 2024 16:21

தமிழகத்தின் பிரபலமான இசை அமைப்பாளரின் மகன், விவாகரத்து செய்தால் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதற்காக தான் குறிப்பிட்ட மதத்திற்கு மாறியதாக அறிவித்துவிட்டு விவாகரத்து செய்யாமல் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரியும். இதுபோன்று சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வசதி உள்ளவர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்வார்கள். அனைவருக்கும் பொதுவான எதார்த்தமான கல்யாண சட்டம் தேவை.


என்றும் இந்தியன்
ஜூலை 10, 2024 16:19

ஐயோ ஐயோ மோடி அரசு பிஜேபி அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்த்தின் தீர்ப்பு கூறுகின்றது - இப்படிக்கு முஸ்லீம் நேரு காங்கிரஸ் திமுக விஜயன் கட்சி ........


RajK
ஜூலை 10, 2024 16:17

பல பல குழந்தைகளைப் பெற்றுவிட்டு பிறகு பிரிந்து செல்வது என் விருப்பம் என்றால் அந்த குழந்தைகளின் தாய் என்ன செய்ய முடியும்? அதுமட்டுமின்றி, மதவாரியான சட்டங்களை பயன்படுத்தி வெளிநாட்டில் மிக மிக வசதியாக உள்ளவர்கள் இந்தியா டூர் வரும் பொழுது ஒரு கல்யாணம் செய்துகொண்டு பிறகு செல்லும்பொழுது எளிதாக தலாக் சொல்லி செல்வது எந்த வகையில் நியாயம்? இதற்கெல்லாம் நல்ல தீர்ப்பு தற்போது கொடுக்கப்பட்டுள்ளது.


Kavi
ஜூலை 10, 2024 15:39

Excellent judgement


Balaji Radhakrishnan
ஜூலை 10, 2024 15:39

நல்ல தீர்ப்பு. எல்லா பெண்களுக்கு உகந்த தீர்ப்பு.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை