உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வழக்கறிஞரை அதிகமுறை சந்திக்க அனுமதியுங்கள்: கெஜ்ரிவால் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

வழக்கறிஞரை அதிகமுறை சந்திக்க அனுமதியுங்கள்: கெஜ்ரிவால் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: திகார் சிறையில் உள்ள டில்லி முதல்வர் கெஜ்ரிவால், தன் வழக்கறிஞரை அதிக முறை சந்திக்க அனுமதி அளிக்க கோரி தொடர்ந்த வழக்கில், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் 5 நாட்களில் பதிலளிக்க டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டில்லி முதல்வர் கெஜ்ரிவால், மதுபான கொள்கை மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமின் மனு விசாரணையில் உள்ளது. சி.பி.ஐ., அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து கெஜ்ரிவாலை ஜூன் 26ம் தேதி திகார் சிறையில் வைத்து கைது செய்தனர். இந்நிலையில், தன் வழக்கறிஞரை அதிக முறை சந்திக்க அனுமதி அளிக்க கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்து இருந்தார். மனுவில், ‛காணொளி மூலம் தமது வழக்கறிஞருடன் மேலும் 2 முறை பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும்' என கெஜ்ரிவால் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், '' இது தொடர்பாக திகார் சிறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் 5 நாட்களில் பதிலளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

rama adhavan
ஜூலை 08, 2024 19:53

எதற்கு? வக்கீல் உடன் அடிக்கடி பேசுவதற்குப் பதிலாக இவரே கோர்ட்டில் நேராக ஆஜர் ஆகி வாதடலாமே? கோர்ட் அப்படி சொல்லி விடலாமே? ஏன் ரப்பராய் இழுக்கிறது?


RAAJ68
ஜூலை 08, 2024 17:14

அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வதற்கு ரொம்பவே துடிக்கின்றன


s chandrasekar
ஜூலை 08, 2024 16:45

அவர் தனது வக்கீல் அனைவரையும் அவருடனே வைத்துகொள்ளட்டும் .


s chandrasekar
ஜூலை 08, 2024 16:43

வாழ்க இந்தியா இந்திய ஜனநாயகம் .


Lion Drsekar
ஜூலை 08, 2024 16:37

இதே சலுகைகளை பாமர மக்களுக்கு கிடைக்குமா ? ஒன்று பதில் இல்லையென்றால் அடி . அதுவும் உன் அடி என் அடி இல்லை, ஆனால் முக்கிய பிரமுகர்கள் பல லட்சம் , கோடி , தவறு செய்தவர்களைக் துறை ரீதியாக கேள்வி கேட்க்கும்போது அதில் கூறுவது கடமை, பதிலுக்கு வழக்கறிஞர் ...? எதுவும் ஒரு விதத்தில் டிவி சீரியல்தான் . முடிவு ஜார்கண்ட் போல்தான் , இவரே முதல்வர், என்றைக்கும் முதல்வர். வாக்காளப்பெருமக்களுக்கு வாழ்த்துக்கள் . வாழ்க ஜனநாயகம், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நமது ஆழ்ந்த இறங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் . பெற்ற சுதந்திரத்தை அனுபவிப்பவர்கள் யார் என்பதை உங்கள் ஆன்மா பதில்சொல்லவேண்டும் . நீங்களாவது ஏதோ இறைவன் இறைவன் என்று சொல்கிறார்களே , அவர்களை சந்தித்தால் சொல்லுங்கள் , வந்தே மாதரம்


HoneyBee
ஜூலை 08, 2024 16:30

அடப்ப்பாவியளா... நீ என்ன வர வர அராஜகமா இருக்க. நீ இருப்பது ஜெயிலில். மாமியார் வீட்டில் இல்லை. நீயெல்லாம் ஆணை இட கூடாது


Palanisamy Sekar
ஜூலை 08, 2024 16:27

இது என்ன புது மாதிரியா இருக்குது. அரசியல்வாதி என்ன மாதிரியான கோரிக்கை வைத்தாலும் கோர்ட் அவர்களுக்கு அந்த சலுகைகளை வழங்க துடிக்கின்றது. ஏன்? இதே கோரிக்கையை சாமான்ய மக்கள் வைத்தால் காதுகொடுத்து கேட்குமா இதே நீதிமன்றங்கள். பல்வேறு வழக்குகள் பல்லாண்டுகாலமாக நிலுவையில் இருந்துகொண்டு சாமானியர்களுக்கு கடுமையான துன்பத்தை கொடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் இப்படி கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக செயல்படுவது நியாயம்தானா?


கூமூட்டை
ஜூலை 08, 2024 16:16

இது துடப்ப மாடல். மக்கள் மாங்காய் மடையர்கள் என்று நினைக்கிறேன்.


M Ramachandran
ஜூலை 08, 2024 16:08

பேச்சையெல்லாம் நம்பி நீதிபதி குழம்பபோகிறார்.


Narayanan
ஜூலை 08, 2024 15:35

அனைத்து குற்றவாளிகளுக்கும் என்ன சட்டமோ அதுதான் இவருக்கும் . பிறகு என்ன அதிக நேரம்/தடவை? புரியாத புதிர் எதற்கு நீதிமன்றம் தயங்குகிறது ? அவர்களே சொல்லிவிடலாம் . மற்றவர்களுக்கு எப்படியோ அதுபோல்தான் உங்களுக்கும் என்று சொல்லி வழக்கை முடித்துவிடுவதை விடுத்து எதற்கு இந்த வேலை .?


மேலும் செய்திகள்





புதிய வீடியோ