உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 15 நிமிடம் காத்திருந்த அனந்தகுமார் ஹெக்டே

15 நிமிடம் காத்திருந்த அனந்தகுமார் ஹெக்டே

உத்தரகன்னடா : 'சீட்' கை நழுவிய கோபத்தில் இருந்த, பா.ஜ., - எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே, நேற்று தன் மனைவியுடன் வந்து ஓட்டு போட்டார்.லோக்சபா தேர்தலில், உத்தரகன்னடா தொகுதியில் இம்முறை தனக்கு சீட் கிடைக்கும் என, இன்னாள் எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே எதிர்பார்த்தார். ஆனால் இவரது சர்ச்சைக்குரிய பேச்சு, தொண்டர்களின் அதிருப்தியால் சீட் கை நழுவியது. முன்னாள் சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி வேட்பாளரானார். இதனால் அதிருப்தியடைந்த அனந்தகுமார் ஹெக்டே, கட்சி பணிகளில் ஈடுபடவில்லை.வேட்பாளருக்கு ஆதரவாக, பிரசாரமும் செய்யாமல் ஒதுங்கி இருந்தார். உத்தரகன்னடா தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்துக்கு வந்த போதும், அனந்தகுமார் ஹெக்டே தலை காண்பிக்கவில்லை. கோபம் மற்றும் அதிருப்தில் உள்ள இவர், ஓட்டுப்பதிவு செய்வாரா இல்லையா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவர் தன் மனைவியுடன், நேற்று ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டுப்பதிவு செய்தார்.பொதுவாக ஒவ்வொரு தேர்தலிலும், அவர் காலை 8:00 மணிக்கே ஓட்டுப்பதிவு செய்வார். ஆனால் நேற்று மாலை 4:30 மணிக்கு சிர்சி நகரின் கே.ஹெச்.பி., காலனியில் உள்ள அரசு தொடக்க பள்ளியின் ஓட்டுச்சாவடிக்கு வந்தார். 15 நிமிடம் வரிசையில் காத்திருந்து, ஓட்டு போட்டார்.ஓட்டுப்பதிவு செய்து வெளியே வந்த அவர், ஊடகத்தினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி