உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அலட்சியவாதி ரமேஷ் ஜிகஜினகி அமைச்சர் எம்.பி., பாட்டீல் சாடல்

அலட்சியவாதி ரமேஷ் ஜிகஜினகி அமைச்சர் எம்.பி., பாட்டீல் சாடல்

விஜயபுரா: ''பா.ஜ., -- எம்.பி., ரமேஷ் ஜிகஜினகி அலட்சியவாதி,'' என்று, அமைச்சர் எம்.பி., பாட்டீல் குற்றம் சாட்டினார்.விஜயபுரா காங்கிரஸ் வேட்பாளர் ராஜு அல்குரை ஆதரித்து, அமைச்சர் எம்.பி., பாட்டீல் பபலேஸ்வர் குணதாலா கிராமத்தில் பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது:விஜயபுராவில் இருந்து மூன்று முறை பா.ஜ., - எம்.பி.,யாக வெற்றி பெற்ற, ரமேஷ் ஜிகஜினகி தொகுதியின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. வளர்ச்சி பணிகள் செய்வதில் அலட்சியம் காட்டும், ஒரே எம்.பி., அவர் தான். இதனால் அவரை 'அலட்சியவாதி' என்று சொல்லலாம். எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் தங்கள் பதவிக் காலத்தில் குறைந்தது 80 சதவீத பணிகள் செய்ய வேண்டும்.ஆனால் வளர்ச்சி பணிகள் செய்யாமலும், தொகுதியின் பிரச்னை குறித்து லோக்சபாவில் பேசாமலும், ரமேஷ் ஜிகஜினகி மக்களுக்கு துரோகம் செய்து உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ராஜு அல்குர் படித்தவர்.பல மொழிகளில் பேசக்கூடியவர். அவரை லோக்சபாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்போது தான் விஜயபுரா தொகுதியில் நிலவும் பிரச்னைகளுக்கு, ஒரு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை