பெங்களூரு: விரைவில் 2,500 நடத்துனர்களை நியமிக்கும் செயல்பாடு நடந்து வருவதாக, பி.எம்.டி.சி., நிர்வாகம் அறிவித்துள்ளது.பி.எம்.டி.சி.,யில் 58 வயதை கடந்த ஊழியர்களுக்கு, 'பிரயாஸ்' திட்டத்தின் கீழ் ஓய்வு பெறுவதற்கு முன்னரே, ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவை, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, நேற்று வழங்கினார்.இது தொடர்பாக, பி.எம்.டி.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்தாண்டு 2023 ஜூன் 11ல், மாநில அரசு, பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணம் செய்யும் 'சக்தி' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதுவரை பி.எம்.டி.சி.,யில், 75.57 கோடி பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளனர். இதனால், தினமும் கூடுதலாக 1,654 சேவைகள் வழங்கப்படுகின்றன. சராசரியாக நாள் ஒன்றுக்கு, 40 லட்சம் பயணியர் பயணிக்கின்றனர். பிரயாஸ் திட்டம்
58 வயது முடிந்தவர்களுக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் 'பிரயாஸ்' திட்டத்தின் கீழ், ஓய்வூதிய தொகை பெறுவதற்கான உத்தரவை பெறலாம் இத்திட்டத்தால், ஓய்வு பெறுவதற்கு முன்னரே, தேவையான ஆவணங்களை ஒருங்கிணைத்து, முன்கூட்டியே சமர்ப்பிப்பதால், 58 வயதிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு கிடைத்துவிடும் கடந்த மூன்று ஆண்டுகளில், 160 ஓய்வூதிய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன வேலை வாய்ப்பு
2023 - 24ம் ஆண்டுக்கான 250 ஜூனியர் உதவியாளர் மற்றும் டேட்டா ஆப்பரேட்டர்களுக்கு, பணி நியமன உத்தரவை, அமைச்சர் ராமலிங்க ரெட்டி வழங்கினார் 2,500 நடத்துனர்களை வேலையில் அமர்த்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன பி.எம்.டி.சி., ஊழியர்களுக்கான குழு காப்பீட்டுத் தொகை, 3 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினரின் எதிர்கால நலனை கருதி, தலா ஒவ்வொரு ஊழியர் பெயரில், ஒரு கோடி ரூபாய்க்கான காப்பீடு 45 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு இதய பரிசோதனை செய்வதற்காக, ஜெயதேவா மருத்துவமனையுடன் ஐந்து ஆண்டுகள் ஒப்பந்தம் இதுவரை 138 விருதுகளை பி.எம்.டி.சி., பெற்றுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.2_DMR_0005'பிரயாஸ்' திட்டத்தின் கீழ், 58 வயது நிறைவடைந்தவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய உத்தரவை, அமைச்சர் ராமலிங்க ரெட்டி காண்பித்தார். இடம்: பெங்களூரு.