உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயிருடன் இருப்பதை நிரூபிக்க வன்முறையில் இறங்கியவர் கைது

உயிருடன் இருப்பதை நிரூபிக்க வன்முறையில் இறங்கியவர் கைது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், இறந்ததாக அரசால் அறிவிக்கப்பட்ட நபர், தான் உயிருடன் இருப்பதை நிரூபிப்பதற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு போலீசரால் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தானின் பலோத்ராவில் உள்ள மித்தோரா கிராமத்தில் வசிப்பவர் பாபுராம் பில். சில நாட்கள் இவர் தலைமறைவாக இருந்த நிலையில், அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.பாபுராம் வசிக்கும் முகவரிக்கு, அவரது இறப்பு சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.அரசு அலுவலகங்களுக்கு சென்று, தான் உயிருடன் இருப்பதாக கூறி முறையிட்டார். ஆனால், அதிகாரிகள் அலட்சியப்படுத்தினர். அவரது கோரிக்கையை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதையடுத்து, தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க சின்ன சின்ன குற்றங்களில் ஈடுபட்டார்.இதுவரை ஐந்து குற்றங்களை செய்தும் சிக்காமல் இருந்த நிலையில், ஆறாவதாக, பலோத்ரா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்று, தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் பெற்றோரை கத்தியால் குத்தினார்.அது மட்டுமின்றி பள்ளி மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து பாபுராம் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரை கைது செய்தனர்.இறந்ததாக அறிவித்ததால், தன் பூர்வீக சொத்து கையைவிட்டு போகும் என்று பயந்த அவர், உயிருடன் இருப்பதை நிரூபிக்க குற்றச் செயல்கள் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். தன் பெயர் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியானதால், தான் உயிருடன் இருப்பது வெளி உலகத்துக்கு தெரிய வந்துள்ளதை அறிந்து, சிறைக்கு செல்வதையும் மறந்து பாபுராம் மகிழ்ச்சி அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை