மேலும் செய்திகள்
மணக்குள விநாயகர் கல்லுாரியில் ஒரு நாள் பயிலரங்கம்
3 hour(s) ago
இன்றைய மின் தடை
3 hour(s) ago
கான்பெட் நிறுவனத்தில் பட்டாசு கடை இன்று திறப்பு
3 hour(s) ago
கொம்பாக்கம் பகுதியில் நாளை குடிநீர் கட்
3 hour(s) ago
பெங்களூரு: ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளனர்.கர்நாடகாவில் ஓடும், பயணியர் ஆட்டோக்களுக்கு முதல் 2 கி.மீ.,க்கு 30 ரூபாயும், அதன் பின்னர் ஒவ்வொரு கி.மீ.,ருக்கும் 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த பின்னர், முதல் 2 கி.மீ.,க்கு 40 ரூபாயும், அதன் பிறகு ஒவ்வொரு கி.மீ.,க்கும் 20 ரூபாயும் கட்டணம் உயர்த்த வேண்டும் என்று, ஆட்டோ ரிக் ஷா ஓட்டுனர்கள் சங்கம், ஆதர்ஷ் ஆட்டோ சங்கங்கள், போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.'ஆட்டோக்களின் உதிரி பாகங்கள் விலை அதிகரித்து விட்டது. 2021ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத் தொகை இன்னும் உள்ளது. ஓலா, ஊபர், ரேபிடோ நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. 'சில ஆட்டோ ஓட்டுனர்களும் அரசு நிர்ணயித்த கட்டணத்தில், பயணியரை ஏற்றி செல்வதில்லை. அதிகாரபூர்வமற்ற கட்டணத்தை, அரசு அதிகாரபூர்வமாக வேண்டும்' என, ஆதர்ஷ் ஆட்டோ ஓட்டுனர் சங்கத் தலைவர் மஞ்சுநாத் கூறியுள்ளார்.இந்நிலையில் பெங்களூரு சாரதி சேனா, கர்நாடக சாரதி சேனா தொழிற்சங்கம், பெங்களூரு ஆட்டோ சேனா உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்தவர்கள் கூறுகையில், 'ஆட்டோவுக்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண முறையே போதுமானது. ஆனால் செயலி மூலம் இயங்கும் வாகனங்களை குறைக்க வேண்டும். ரேபிடோ பைக்கில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துஉள்ளது.'இந்த சூழ்நிலையில் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தினால், வருமானம் முற்றிலும் அடிபடும். ரேபிடோ பைக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும். அப்படி செய்தால் ஆட்டோக்களை பயன்படுத்தும் பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கும்' என்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago