உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேலைக்கு ரஷ்யா செல்வோர் கவனம்; உக்ரைன் போரில் உயிரிழந்த கேரள வாலிபர் குடும்பம் கதறல்!

வேலைக்கு ரஷ்யா செல்வோர் கவனம்; உக்ரைன் போரில் உயிரிழந்த கேரள வாலிபர் குடும்பம் கதறல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சூர்: வேலை தேடி ரஷ்யா செல்வோர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நல்ல வேலை என்று நம்பி சென்ற கேரளா வாலிபர், உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.

ராணுவ கேண்டீன்

திரிச்சூரின் நாயாரங்கடியைச் சேர்ந்த கன்கில் சந்திரன் மகன் சந்தீப், 36. இவர் கேரளாவைச் சேர்ந்த 7 பேருடன் கடந்த ஏப்ரல் 2ம் தேதி ஏஜென்சி மூலம் ஓட்டலில் வேலை செய்வதற்காக ரஷ்யா சென்றுள்ளார். ஆனால், அங்கு ரஷ்யாவின் ராணுவ கேண்டீனில் வேலை கிடைத்து பணியாற்றி வந்துள்ளார்.

தாக்குதல்

இந்த சூழலில், ரஷ்யாவின் குடியுரிமை பெற வேண்டும் என்று ஆசையினால், ரஷ்ய ராணுவத்தில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார். அவர் உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டார்.அவர் இருந்த ராணுவ வாகனம் மீது, உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், சந்தீப் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு வருகிறது. சந்தீப் உயிரிழந்ததை ரஷ்யாவின் மலையாளிகளின் சங்கம் உறுதி செய்துள்ளது.

மத்திய அரசு

இந்த நிலையில், சந்தீப்பின் உடலை பெற்றுத் தருமாறு மத்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மற்றும் மாநில அமைச்சர் ஜார்ஜ் குரியனிடம் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் உடலை பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோரிக்கை

சந்தீப் குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், 'மாஸ்கோவில் ரெஸ்டாரன்டில் வேலை என்று தான் முதலில் சந்தீப் கூறினார். பின்னர், ரஷ்யாவின் ராணுவ கேண்டீனில் பணி கிடைத்துள்ளதாகவும், அங்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் எங்களிடம் கூறினார். ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றத் தொடங்கிய பிறகு எங்களிடம் தொடர்பு கொள்ளவில்லை. ரஷ்யாவில் உள்ள அவரது நண்பர்களுடனும் சரிவர பேசிக்கொள்வதில்லை. அவரது உடலை மத்திய அரசு தலையீட்டு பெற்றுத் தர வேண்டும்' எனக் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.ரஷ்யா சார்பில் போரில் ஈடுபடுவதற்கு அந்நாட்டினர் அதிகம் முன் வருவதில்லை. இதனால் வேலை தேடி வரும் வெளிநாட்டினருக்கு ஆசை வார்த்தை கூறி, போரில் ஈடுபடுத்துகின்றனர். இதில் விவரம் தெரியாமல் சென்று மாட்டிக்கொள்ளும் அப்பாவிகள் உயிரிழக்கின்றனர். எனவே ரஷ்யா வேலைவாய்ப்பு என்றால், கவனத்துடன் இருப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

நிக்கோல்தாம்சன்
ஆக 19, 2024 14:12

இந்திய ராணுவத்தில் பணிபுரிய வாருங்க என்றால் இந்தியாவிற்கு எதிராக வேலைபார்ப்பார்கள் , வெளிநாட்டில் போயி இப்படி ஆயிட்டதே


அப்பாவி
ஆக 19, 2024 11:17

புட்டின் தான் மோடிக்கு வாக்கு குடுத்துட்டாரே... இனிமே போற இந்தியர்களுக்கு ரஷியப் பேர் வெச்சு ராணுவத்தில் சேத்துருவாங்க. யாரும்.கேள்வி கேக்க மாட்டாங்க.


rsudarsan lic
ஆக 19, 2024 10:34

கொஞ்சம் நாட்டுக்கும் சேவை செய்யுங்க


Jai
ஆக 19, 2024 10:15

போர் உச்சகட்டத்தில் இருக்கும் ஒரு நாட்டில் படிக்கப் போவதும் வேலைக்கு போவதும் நிச்சயம் ஆபத்துதான். நமக்கு ஆர்வமுள்ள தொழிலில் முழு மனதாக இறங்கி கடினமாக உழைத்தால் இங்கு மிகப் பெரிய வெற்றியை பெறலாம்.


Ram
ஆக 19, 2024 08:36

இவரா போனதற்கு என்ன செய்யமுடியும்


tmranganathan
ஆக 19, 2024 08:16

கேரளாவில் ஐம்பது ஆண்டுகள் வாஷிந்துஉள்ளேன். அங்கே காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் மலையாளிகளுக்கு விலை வாய்ப்பு கொடுப்பதில்லை. ஆகவே அவர்கள் ரஷ்யா சென்றுள்ளனர். அவர்கள் உயிர் பறிபோனதற்கு முதல்வரே காரணம். கம்யூனிஸ்ட்கள் பின்ராயி அங்குள்ளவரை கேரளா உருப்படாது.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ