உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மே.வங்கத்தில் ஆசிரியர்கள் பணிநீக்கம் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு தடை

மே.வங்கத்தில் ஆசிரியர்கள் பணிநீக்கம் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மே.வங்கத்தில் ஆசிரியர்கள் பணிநீக்க விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசுக்கு நிம்மதி அளித்துள்ளது. மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 2016ம் ஆண்டுக்கு பிறகு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட 26 ஆயிரம் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து கோல்கட்டா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த முறைகேடுகள் குறித்து விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை அளிக்க சி.பி.ஐ.,க்கு கோல்கட்டா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணமுல் காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (ஏப்ரல் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியர்கள் பணி நீக்கம் விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசுக்கு நிம்மதி அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

rao
ஏப் 30, 2024 10:16

Judges of SC do not act as per their consecious, but act per their political masters in the states.


அருண் பிரகாஷ் மதுரை
ஏப் 29, 2024 22:35

நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் மம்தா உச்ச நீதிமன்றத்தை குறை சொல்லாமல் தனக்கு எதிராக தீர்ப்பு கொடுத்த உயர்நீதிமன்றத்தை குறை சொன்னார்.இன்று உச்சநீதிமன்றம் அவருக்கு சாதகமாக செயல்படுகிறது.இப்படி கீழமை நீதிமன்றக் கட்டுப்பாடுகள் அனைத்தும் உச்சநீதிமன்றம் தலையிட்டு எதிராக நடவடிக்கை எடுத்தால் அதற்கு என்ன அர்த்தம். எதன் அடிப்படையில் என்ன காரணத்திற்காக சிபிஐ விசாரிக்க தடை.தவறு நடக்கவில்லை என்றால் எப்படி உயர்நீதிமன்றம் வேலையை ரத்து செய்து சம்பளம் திருப்பிக் கொடுக்க தீர்ப்பு வழங்கும்.உச்ச நீதிமன்றத்தில் தவறுகள் நடக்கிறது.பொன்முடி வழக்கு ஒரு முக்கியமான வழக்கு.அடிப்படை இல்லாமல் தீர்ப்பு அதிலும் ரத்து செய்யப்பட்டது.ஒரு சில உச்சநீதிமன்ற நீதிபதிகள் முக்கியமாக நிலவைப் பெயராகக் கொண்டவர் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார் என்றும் பாஜக எதிர்ப்பு மனநிலையில் இருக்கிறார் என்றே தோன்றுகின்றது.அவரது குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியம் கொண்ட குடும்பம் என்பது கொசுறு செய்தி.


G Mahalingam
ஏப் 29, 2024 21:33

இப்போதாவது தெரிந்தால் சரி உச்ச நீதிமன்றம் மோடி அசைவில் இல்லை என்று எதிர்கட்சி தலைவருக்கு தெரிந்தால் சரி


விடியல்
ஏப் 29, 2024 21:09

உச்ச நீதிமன்றம் ஐகோர்ட் தீர்ப்பை மதிக்க வில்லை.எதற்காக இந்த தடை யார் இந்த புண்ணிய வான் நீதியரசர் . அதிகாரம் இருப்பது நீதியை நிலைநாட்டவா தள்ளி ப்போட்டு நீதியை மறுப்பதா.ஆயிரகண்க்கில் பலர் கொடுத்த பணம் ஐம்பது கோடி பிடிப்ட்டது மந்திரி வீட்டிலும் அவருடைய பினாமி நடிகை வீட்டிலும்.


Kuma
ஏப் 29, 2024 20:19

உச்ச நீதிமன்றம் ஊழல்வாதிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குகிறது ..example பொன்முடி வழக்கு


Dharmavaan
ஏப் 29, 2024 19:54

எல்லா அரசியல் திருடனையும் காப்பது உச்ச நீதி கேவலம் கேட்பாரில்லைநீதியை அழிக்கிறது வெளியே பயிரை மேய்கிறது


GMM
ஏப் 29, 2024 19:43

பாராளுமன்ற சட்டத்தை அப்படியே மாநில அரசு ஏற்க மறுத்து திருத்தம் செய்ய முடியும் உயர் நீதிமன்றம் உத்தரவு மீது உச்ச நீதிமன்றம் தடை செய்ய முடியும் சட்டத்தின் ஆட்சி மாறி, ஆளை பொறுத்து, ஆட்சியை பொறுத்து சட்டம் பயன்படுத்த முடியும்? ஒரே சட்ட விதி விருப்பம் சார்ந்த அறிவிப்புகள்


M S RAGHUNATHAN
ஏப் 29, 2024 19:34

உச்ச நீதிமன்றத்தின் போக்கு வேடிக்கையாக இருக்கிறது ஒரு உயர்நீதிமன்ற அமர்வு ஒருமித்த தீர்ப்பாக ஊழல் நடந்து இருக்கிறது ஆகவே வேலைக்கு தேர்வானவர்கள் நியமனம் செல்லாது என்று தீர விசாரித்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது வழக்கை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவு இட்டு இருக்கிறது ஊழல் எப்படி நடந்தது என்று விசாரிக்க வேண்டாமா? ஏன் தடை? உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு தவறு என்றால் அந்த நீதிபதிகள் மேல் உச்ச நீதி மன்றம் நடவடிக்கை எடுக்கட்டும் விசாரணையை தடை செய்வது சரியல்ல ஏனோ தெரியவில்லை தமிழ்நாடு, வங்காளம் என்றால் உச்ச நீதி மன்றங்கள் பம்முகின்றன


தாமரை மலர்கிறது
ஏப் 29, 2024 19:20

லோக்கல் போலீஸ் மம்தாவை எப்படி விசாரிக்க இயலும்? சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் தேர்தலுக்கு முன், மம்தாவும் கெஜ்ரிக்கு கம்பெனி கொடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை