உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தென்னிந்திய திருவிழாவுக்கு பெங்களூரு தயார் தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் புது முயற்சி

தென்னிந்திய திருவிழாவுக்கு பெங்களூரு தயார் தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் புது முயற்சி

பெங்களூரு: இரண்டு நாட்களுக்கான தென்னிந்திய திருவிழாவை, பெங்களூரு அரண்மனை மைதானத்தில், முதல்வர் சித்தராமையா, இன்று துவக்கி வைக்கிறார். சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக, தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சுற்றுலா துறை இயக்குனர் ராம்பிரசாத் மனோகர் புது முயற்சி எடுத்துள்ளார்.கர்நாடகாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், எப்.கே.சி.சி.ஐ., எனும் கர்நாடக வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு மற்றும் கர்நாடக சுற்றுலா துறை இணைந்து, பெங்களூரு அரண்மனை மைதானத்தில், இரண்டு நாட்களுக்கான, 'தென்னிந்திய திருவிழா - 2024' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழாவை முதல்வர் சித்தராமையா, இன்று காலை 10:00 மணிக்கு துவக்கி வைக்கிறார். துணை முதல்வர் சிவகுமார், சுற்றுலா துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் முன்னிலை வகிக்கின்றனர். எப்.கே.சி.சி.ஐ., தலைவர் ரமேஷ் சந்திர லொஹட்டி தலைமை வகிக்கிறார்.சுற்றுலா துறையில், கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, லட்சத்தீவு என தென் மாநிலங்களை இணைத்து, சிறு, குறு தொழில் முனைவோரை ஊக்குவிக்க வேண்டும் என்று தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சுற்றுலா துறை இயக்குனர் ராம்பிரசாத் மனோகர் முன்னெடுத்தார்.இதன் விளைவாக, எப்.கே.சி.சி.ஐ.,வுடன் இணைந்து, தென்னிந்திய திருவிழா நடத்தப்படுகிறது.விழா ஏற்பாடுகளை நேற்று ஆய்வு செய்த பின், அவர் கூறியதாவது:இரண்டு நாட்களில், கர்நாடக சுற்றுலா துறையில், 1,000 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும், வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும், 1,500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.ஏழு தென் மாநிலங்களிலும், சுற்றுலா துறையில் முதலீடு செய்ய, பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. இதற்கு ஒரே இடத்தில் வாய்ப்பு ஏற்படுத்தி தருவது மூலம், சர்வதேச அளவில், சந்தை ஏற்படுத்தி தருவதே எங்கள் நோக்கம். விழாவில் 80க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டு, சுற்றுலா துறையை மேம்படுத்துவோம்.இவ்வாறு அவர்கூறினார்.விழாவை முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார். நாளை மாலை, கவர்னர்தாவர்சந்த் கெலாட் நிறைவு விழாவில் பங்கேற்கிறார். இரண்டு நாட்களும் சுற்றுலா துறை தொடர்பான கருத்தரங்குகள் நடக்கும். துறை நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.- ரமேஷ் சந்திர லொஹட்டி, தலைவர், எப்.கே.சி.சி.ஐ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்