உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள்: சென்னை ஐ.ஐ.டி.,க்கு 227வது இடம்

உலகிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள்: சென்னை ஐ.ஐ.டி.,க்கு 227வது இடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி., , டில்லி ஐ.ஐ.டி., ஆகியவை இடம் பெற்றுள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் 383வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி., 227வது இடத்தை பெற்றுள்ளது. க்யூ.எஸ்., எனப்படும், குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் என்ற தனியார் கல்வி ஆய்வு நிறுவனம், உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. 2025ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 104 நாடுகளை சேர்ந்த 1,500க்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

46 கல்வி நிறுவனங்கள்

தரவரிசைப்பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 46 உயர் கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. சிறந்த உயா்கல்வி நிறுவனங்கள் அதிகம் கொண்ட 3வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. * இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் 118வது தரவரிசையுடன் மும்பை ஐ.ஐ.டி., முன்னிலை வகித்துள்ளது. * முந்தைய ஆண்டில் 285ம் இடம் பிடித்த சென்னை ஐ.ஐ.டி., இந்த முறை 227வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. * அதேபோல், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 427வது இடத்திலிருந்து 383ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. டில்லி பல்கலை., 407வது இடத்தில் இருந்து 328ம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

J.V. Iyer
ஜூன் 06, 2024 15:52

சர்க்கரை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை. இளைஞன் இல்லாத ஊரில் கிழவர்கள் ஆடுவது இல்லையா? அதுபோலத்தான். மத்திய அரசும் நிறைய பணம் இந்த நிறுவனங்களுக்கு கொடுக்கிறார்கள். ஆனால் இவர்கள் முறையாக பயன் படுத்துவதில்லை. பயன்படுத்த விடுவதில்லை. எங்கும் அரசியல். எல்லாவற்றிலும் அரசியல். என்ன செய்வது?


Vijay D Ratnam
ஜூன் 06, 2024 14:13

லண்டனில் இருக்கும் இந்த QS எனும் Quacquerelli Symonds ஒரு டுபாக்கூர் அமைப்பு.. இவிங்க எதை அடிப்படையாக வைத்து இது பெஸ்ட், அது வொர்ஸ்ட்னு லிஸ்டிங் பண்றங்கன்னு பார்த்தால் ஒன்னும் இல்லை.


Ramesh Sargam
ஜூன் 06, 2024 12:15

முதல் இடம், இரண்டாம் இடம் ... எல்லாம் ஏன் அறிவிக்கவில்லை?


பாமரன்
ஜூன் 06, 2024 11:21

வெளிநாட்டு உதவியுடன் காங்கிரஸ் தொடங்கிய சொகுசு வசதிகளை கொண்ட ஐஐடிகளை தவிர்த்து பார்த்தால் அண்ணா பல்கலைதான் சிறந்த இடத்தில் இருக்கு...


வீரபத்திரன்,கருங்காலக்குடி
ஜூன் 06, 2024 10:51

அதே போல சென்னை அண்ணா பல்கலைகழகம் என்ற பெயரில் இருப்பதை அண்ணா என்ற பெயரை நீக்கிவிட்டால் தர வரிசை பட்டியலில் இன்னும் பல படிகளில் முன்னேற கண்டிப்பாக வாய்ப்புள்ளது.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 06, 2024 13:50

எனுங்க சொல்றது சரிதான். சொன்ன நேரம்தான் சரியில்லை. இப்போ நாப்பதுக்கு நாப்பது நேரத்துல உங்க கருத்தை ஏத்துக்கிட்டு கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம் ன்னு இல்லாட்டி உயரவைத்தான் உதயநிதியார் பல்கலைக்கழகம் ன்னு பேரை மாத்தி வைக்கப்போறாங்க. அப்புறம் தர வரிசைப் பட்டியலில் எடமே இருக்காது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை