உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூகுள் டிஜிட்டல் விளம்பரத்திற்காக ரூ.101 கோடி செலவிட்ட பா.ஜ.,

கூகுள் டிஜிட்டல் விளம்பரத்திற்காக ரூ.101 கோடி செலவிட்ட பா.ஜ.,

புதுடில்லி :லோக்சபா தேர்தலையொட்டி பிரபல தேடுபொறி நிறுவனமான 'கூகுள்' மற்றும் அதன் வீடியோ தளமான 'யு - டியூப்' ஆகியவற்றில், வாக்காளர்களை கவரும் வகையில் பா.ஜ., 101 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் விளம்பரங்கள் செய்துள்ளது. கூகுள் நிறுவனம், தன் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில், அந்நிறுவனத்தின் வாயிலாக கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் முதல் டிஜிட்டல் விளம்பரங்கள் வெளியிட்டோரின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.இதில், தேசிய மற்றும் மாநில அளவிலான கட்சிகள் இடம்பிடித்துள்ளன.இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:கடந்த 2018ம் ஆண்டு மே 31 முதல், நேற்று முன்தினம் வரை கூகுள் நிறுவனத்தின் வாயிலாக, பா.ஜ., காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், டிஜிட்டல் விளம்பரங்களுக்காக 390 கோடி ரூபாய் செலவிட்டு உள்ளன. இதில், பா.ஜ., மட்டும் 101 கோடி ரூபாய் செலவிட்டுள்ளன. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் காங்கிரஸ் 45 கோடி ரூபாயும், தி.மு.க., 42 கோடி ரூபாயும், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி, 12 கோடி ரூபாயும் செலவிட்டுள்ளன.இதேபோல் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நடத்தும் ஐ - பேக் நிறுவனம் வாயிலாக, ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் 6.4 கோடி ரூபாயும், அதற்கு அடுத்ததாக, மேற்கு வங்கத்தின் திரிணமுல் காங்கிரஸ் 4.8 கோடி ரூபாயும் டிஜிட்டல் விளம்பரங்களுக்காக செலவிட்டுள்ளன.கூகுள் வாயிலாக டிஜிட்டல் விளம்பரங்கள் அதிகளவு ஒளிபரப்பப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்ததாக தெலுங்கானா, உத்தர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
ஏப் 27, 2024 11:16

அவர்களுக்கு பணத்துக்கு என்ன குறைச்சல்? அதுதான் தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடிக்கணக்கில் வசூல் செய்து அதை என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனரே!


ellar
ஏப் 27, 2024 11:06

தேர்தல் முடிந்த பிறகு விளம்பரத்திற்கு ஒவ்வொரு கட்சியும் செய்த அனைத்து வகை அதாவது கூகுள் டிஜிட்டல் இதர சமூக ஊடகங்கள் சினிமா தியேட்டர் போஸ்டர் அடித்தல் சுவற்றில் எழுதுதல் டீ சர்ட் தொப்பி துணி வகைகள் ஆகியவற்றில் கட்சிகளின் சின்னத்தோடு வாக்காளர்களுக்கு வழங்குதல் ஆகிய மொத்த செலவையும் தெரிவித்தால்அது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்


ஆரூர் ரங்
ஏப் 27, 2024 10:52

திராவிடக் கட்சிகள் மகிழ்விக்கின்றன.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ