உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ், மா.கம்யூ., கட்சிகள் பா.ஜ.,வின் இரு கண்கள்: மம்தா சாடல்

காங்கிரஸ், மா.கம்யூ., கட்சிகள் பா.ஜ.,வின் இரு கண்கள்: மம்தா சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: 'மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வின் இரு கண்களாக காங்கிரசும், மா.கம்யூ.,ம் இருக்கின்றன' என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் மா.கம்யூனிஸ்ட் பா.ஜ.,வுடன் இணைந்து செயல்படுகிறது. மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் நாங்கள் கூட்டணியில் இல்லை. மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடும் திரிணமுல் காங்கிரஸ் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக எதிர்க்கும். காங்கிரஸ் அல்லது மா.கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

நடனம் ஆடிய மம்தா!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மால்டா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலைஞர்களுடன் நடனமாடினார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. துர்காபுரில், நேற்று (ஏப்ரல் 27) படிக்கட்டுகளில் ஏறி ஹெலிகாப்டருக்குள் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 29, 2024 09:52

புள்ளி வைத்த இண்டி கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்க்கிறது இது எல்லா மாநிலத்திற்கும் பொது என்று நமது தமிழக முதல்வரும் இண்டி கூட்டணி தலைவரும் மாண்புமிகு மதிப்பிற்குரிய திருஸ்டாலின் அவர்கள் கூறி வருகிறார்கள் ஆனால் கேரளாவில் இண்டி கூட்டணி தலைவரும் தன்னை தானே பிரதமராக எண்ணிக் கொண்டு உள்ள திருராகுல் காந்தி அவர்களை அதே இண்டி கூட்டணி தலைவரும் மாகம்யூனிஸ்ட் தலைவரும் திருராஜா அவர்களின் மனைவி திருமதி ஆனி ராஜா அவர்கள் எதிர்த்து போட்டி இடுகிறார் கேரள முதல்வர் திருபிரணாயி விஜயன் அவர்கள் திருராகுல் காந்தி ஏதும் தெரியாதவர் முக்கிய பிரச்சினைகள் போது நாட்டை விட்டு ஓடிப் போய் விடுவார் என்கிறார் எல்லாவற்றிக்கும் மேலாக தற்போது மதிப்பிற்குரிய திருமதி மம்தா அவர்கள் காங்கிரஸ் பாஜகவின் கூட்டணி என்கிறார் மாகம்யூனிஸ்ட் கட்சி பாஜகவின் தோழன் என்பது போல கூறுகிறார் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி காங்கிரஸ் எதிர்த்து போட்டி இடுகிறது ஆனால் ஆம்ஆத்மி காங்கிரஸ் இரண்டும் இண்டி கூட்டணி உள்ளது இது என்ன மாதிரியான கூட்டணி என்று புரியவில்லை இந்த கூட்டணி ஆட்சி வந்தால் எப்படி மத்தியில் நிலையான மற்றும் திடமான ஆட்சி அமையும் பாவம் பாமர மக்கள்


Rajasekar Jayaraman
ஏப் 29, 2024 08:49

இந்த தேச விரோதிக்கு பங்களாதேஷ் மற்றும் சீனா இரு கண்கள்.


P R ravi
ஏப் 28, 2024 21:33

என்ன கூட்டணி உங்க கூட்டணி இண்டி கூட்டணியா அசிங்கமான கூட்டணி வெளியில் கட்டிப்பிடிப்போம் வீட்டுக்குள்ள வந்தா கல்லால் அடிப்போம்


Ramesh Sargam
ஏப் 28, 2024 20:32

இவர் போன்ற தலைவர்கள் இருக்கும்வரையில் அந்த புள்ளிவைத்த இந்டீயா கூட்டணி உருப்படவே உருப்படாது, கூடவே கூடாது


sankaranarayanan
ஏப் 28, 2024 20:21

படிக்கட்டுகளில் ஏறி ஹெலிகாப்டருக்குள் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார் என்ற செய்தி வந்தவுடன் மக்களுடன் நடனமாடினார் என்று மற்றொரு செய்தியும் வருகிறது இவர்களெல்லாம் அரசியல் கோமாளிகள் என்றே சொல்லலாம்


RV Ramesh Viralipatti
ஏப் 28, 2024 19:12

அப்ப இண்டியா கூட்டனி


திருநாவுக்கரசு,நாகர்கோவில்
ஏப் 28, 2024 19:11

அடுத்ததாக இந்த அம்மணி என்ன அவதாரம் எடுக்கப் போகிறதோ என்பதுதான் அங்குள்ள அனைத்து எதிர்கட்சிகளின் கவலையாக உள்ளது.


ராஜவேல்,வத்தலக்குண்டு
ஏப் 28, 2024 19:08

ஆனால் தீதியோட திரிணாமுல் காங்கிரஸ் தீவிரவாதிகளின் புகலிடம் வந்தேறி பங்ளாதேஷிகளின் சொர்க்கம் இந்த முறை மம்தாவின் கட்சி மேற்குவங்கத்தில் மரண அடி வாங்குவது உறுதி.


K.Muthuraj
ஏப் 28, 2024 19:01

அப்ப அந்த கண்களை வைத்து பார்க்கும் பாஜ வின் பார்வை ராஜபார்வைதான்


Dharmavaan
ஏப் 28, 2024 18:47

தரம் கெட்ட கேவலமான தேசத்துரோகி தேசவிரோதி மம்தா பேகம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை