உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் சூரஜ் கைது

பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் சூரஜ் கைது

ஹாசன்: பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, 66. இவரது மூத்த மகன் சூரஜ், 36. ம.ஜ.த.,- - எம்.எல்.சி., ஆக உள்ளார். வாலிபருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ம.ஜ.த., - எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணா மீது, மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவாகி உள்ளது.இந்நிலையில் பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் சூரஜ் ரேவண்ணா இன்று(ஜூன் 23) கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சூரஜ் கூறுகையில், ''எனக்கு எதிராக அரசியல் சதி நடக்கிறது. விசாரணையில் உண்மை வெளிவரும். சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. யார் மீதும் நான் குற்றச்சாட்டு கூற மாட்டேன்,'' என்றார்.ஏற்கனவே, பல பெண்களுக்கு பாலியல் கொடுத்ததாக கூறி, தொடரப்பட்ட வழக்கில், சூரஜ் ரேவண்ணாவின் அண்ணன் பிரஜ்வல் நீதிமன்ற காவலில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை