உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமண நிகழ்வில் நடனமாடிய மணப்பெண் மாரடைப்பால் பலி

திருமண நிகழ்வில் நடனமாடிய மணப்பெண் மாரடைப்பால் பலி

நைனிடால், உத்தரகண்டில், திருமணத்தின் போது உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த மணப்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.டில்லியை சேர்ந்தவர் ஷ்ரேயா ஜெயின், 28. இவருக்கு உத்தரகண்டின் நைனிடாலில் உள்ள சொகுசு விடுதியில் கடந்த 16ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக ஷ்ரேயா ஜெயின், தன் குடும்பத்தினருடன் நைனிடால் வந்தார்.திருமணத்துக்கு முந்தைய நாளான, 15ம் தேதி, 'மெஹந்தி' எனப்படும், மருதாணி இடும் விழா நடந்தது. அப்போது, மணமகள் மற்றும் மணமகன் வீட்டார் ஒன்று சேர்ந்து பாடல்களை ஒலிக்கவிட்டு உற்சாகமாக நடனமாடினர்.மணப்பெண் ஷ்ரேயா, மணமகனுடன் சேர்ந்து நடனமாடினர். ஒருகட்டத்தில் ஷ்ரேயா திடீரென மயங்கி விழுந்தார்.அவரை உடனடியாக மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.திருமணத்தின் போது மாரடைப்பால் மணமகள் உயிரிழப்பது கடந்த வாரத்தில் இது இரண்டாவது சம்பவம். உத்தர பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்த ஷிவாங்கி என்ற பெண், திருமண மேடையில் மந்திரங்கள் முழங்க சம்பிரதாயங்கள் நடந்து கொண்டிருந்தபோது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ