உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லட்சுமி ஹெப்பால்கர் மீது வழக்கு; மக்கள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

லட்சுமி ஹெப்பால்கர் மீது வழக்கு; மக்கள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: லோக்சபா தேர்தல் விதிகளை மீறியதால், மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்யும்படி, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெலகாவி லோக்சபா தொகுதியில், அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் மகன் மிருணாள், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். மகனுக்காக லட்சுமி ஹெப்பால்கர், தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, பெலகாவியின், ஹிண்டல்காவில் அங்கன்வாடி ஊழியர்களுடன், ஆலோசனை கூட்டம் நடத்தினார்.நிர்வாக அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டியிருந்தால், தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது கட்டாயம். ஆனால் அமைச்சர் அனுமதி ஏதும் பெறவில்லை. இது தொடர்பாக, தேர்தல் அதிகாரி மஹாந்தேஷ், பெங்களூரின் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால், அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்யும்படி, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம், நேற்று உத்தரவிட்டது. ஏப்ரல் 30ல், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி அமைச்சருக்கு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை