| ADDED : மே 19, 2024 03:26 AM
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் இடையேயான போட்டியை, முதல்வர் சித்தராமையா, நடிகர் சிவராஜ் குமார் பார்த்து ரசித்தனர்.நடப்பாண்டு ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது.'பிளே ஆப்' சுற்றுக்குள் செல்ல, இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் இருந்தன.இப்போட்டியை காண முதல்வர் சித்தராமையா, மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, அமைச்சர் மஹாதேவப்பா, நடிகர் சிவராஜ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்திருந்தனர்.முதல்வர் சித்தராமையா வந்திருக்கும் தகவல் அறிந்த சிவராஜ் குமார், நேரடியாக அவர் இருந்த அறைக்குச் சென்று, கைகொடுத்தார். இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., போட்டியை பார்க்க வந்தபோது, கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்ட முதல்வர் சித்தராமையா, நடிகர் சிவராஜ் குமார். இடம்: பெங்களூரு.