உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் பதவி சர்ச்சை ரேவண்ணா எரிச்சல்

முதல்வர் பதவி சர்ச்சை ரேவண்ணா எரிச்சல்

ராம்நகர்: ''முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில், மாநில அரசு சிறப்பான நிர்வாகத்தை அளித்துள்ளது. முதல்வர் மாற்றம் என்பது அர்த்தமற்றது,'' என, வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு கமிட்டி தலைவர் எச்.எம்.ரேவண்ணா தெரிவித்தார்.இது குறித்து, ராம்நகர் மாகடியில் நேற்று அவர் அளித்த பேட்டி:முதல்வர் மாற்றம் குறித்து, வீதி, வீதியாக பேசுகின்றனர். இது போன்று பேசுவது தவறு. கட்சியில் என்ன மாற்றங்கள் செய்யாத நிலையிலும், எதிர்க்கட்சி பா.ஜ., தலைவர்கள் கூப்பாடு போடுகின்றனர். இவர்களின் வாய்க்கு ஆளுங்கட்சி தலைவர்கள், தொண்டர்கள் உணவாக கூடாது.முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில், மாநில அரசு சிறப்பான நிர்வாகத்தை அளித்துள்ளது. இச்சூழ்நிலையில் முதல்வர் மாற்றம் என, விவாதிப்பது அர்த்தமற்றது. கடந்த ஓராண்டாக கிரஹ லட்சுமி திட்டத்தின் உதவித்தொகை கிடைப்பது தாமதமாகிறது. விரைவில் அனைவரின் கணக்கில் பணம் செலுத்தப்படும்.தண்ணீர் விஷயத்தில், அரசியல் தேவையில்லை. நாம் அனைவரும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். ஹேமாவதி தண்ணீர், வேறு மாநிலத்துக்கு அளிக்கப்படாது. கூடுதல் நீரை மட்டுமே, கால்வாய் மூலம் ஏரிகளை நிரப்புகிறோம்.இவ்வாறு கூறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ