உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கே.ஆர்.எஸ்., அணையில் 27ல் முதல்வர் பூஜை

கே.ஆர்.எஸ்., அணையில் 27ல் முதல்வர் பூஜை

மாண்டியா: காவிரி நீர்ப்பாசன பகுதிகளில், கன மழை பெய்து வருகிறது. கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. வரும் 27ல் முதல்வர் சித்தராமையா, கே.ஆர்.எஸ்., அணைக்கு சமர்ப்பண பூஜை செய்ய உள்ளார்.ஸ்ரீரங்கபட்டணா காங்கிரஸ் எம்.எல்.ஏ., பன்டி சித்தேகவுடா நேற்று அளித்த பேட்டி:காவிரி நீர்ப்பாசன பகுதிகளில், நல்ல மழை பெய்கிறது. மாண்டியாவின், ஸ்ரீரங்கபட்டணாவில் உள்ள கே.ஆர்.எஸ்., அணை நிரம்ப, 2 டி.எம்.சி., தண்ணீர் தேவை. மழை நீடிப்பதால் எந்த நேரத்திலும் அணை நிரம்பும்.கே.ஆர்.எஸ்., அணை நிரம்புவது, பண்டிகை போன்றதாகும். வரும் 27ல் கே.ஆர்.எஸ்., அணைக்கு, முதல்வர் சித்தராமையா சமர்ப்பண பூஜை செய்கிறார். துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள், மாண்டியா, மைசூரு பகுதிகளின் அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பர்.அணையில் இருந்து உபரி நீர், வெளியேற்றப்படுகிறது. பெருமளவில் தண்ணீர் திறப்பதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். ஆற்றங்கரையில் வசிப்போர் கவனமாக இருக்க வேண்டும்.கால்நடைகளை ஆற்றங்கரையில் மேய விடக்கூடாது. முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடத்துக்கு செல்லுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundarsvpr
ஜூலை 22, 2024 10:18

அணைக்கு சமர்ப்பன பூஜை செய்வது ஒரு அரசியல் நடவடிக்கை. அணைக்கு வரும் நீர் தான் தெய்வம். இதற்கு பூஜை செய்ய வேண்டியது விவசாயிகள். இயற்கை வழங்கும் பொது கோடையை தூய உள்ளத்தில் பகிர்ந்து அளிக்காமல் தேக்கிவைப்பவர்கள் செய்திடும் பூஜையை வருண பகவான் ஏற்கமாட்டான்.


மேலும் செய்திகள்