உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ராணுவத்தில் மேற்கொள்ள காங்., முயற்சி

மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ராணுவத்தில் மேற்கொள்ள காங்., முயற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விசாகப்பட்டினம்: “ராணுவத்தில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த, காங்கிரஸ் ரகசிய முயற்சி மேற்கொள்கிறது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டி, 2006ல் ஆயுதப்படைகளில் மத அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை பரிந்துரைத்தது. இது காங்கிரசின் தற்போதை தேர்தல் அறிக்கையில் எதிரொலிப்பது கவலையளிக்கிறது. சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தி, ராணுவத்திலும் இந்த யோசனையை விரிவுப்படுத்தினால், அது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு நல்லதல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன், ஓ.பி.சி.,களுக்கு ஒதுக்கப்பட்ட 27 சதவீதத்துக்குள், முஸ்லிம்களுக்கு 6 சதவீதமும், பிற சிறுபான்மையினருக்கு 2 சதவீதமும் பரிந்துரைத்தது. காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகள், நம் சமூகத்தை பிளவுபடுத்துவதாக உள்ளது. இது, மத அடிப்படையில், பின்வாசல் வழியாக நாட்டை பிளவுபடுத்த மேற்கொள்ளும் ரகசிய முயற்சியாகும்.இவ்வாறு அவர் பேசினார்.

ரத்து செய்யப்படும்'

தெலுங்கானாவில் உள்ள மேடக் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ரகுநந்தன் ராவை ஆதரித்து, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: சமீபத்தில் தான் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இங்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை காங்கிரஸ் பாதுகாக்கும் என, முதல்வர் ரேவந்த் ரெட்டி கடந்த மாதம் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் தெலுங்கானாவை டில்லியின் ஏ.டி.எம்.,மாக மாற்றியுள்ளார். ஆந்திராவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம். அதனை எஸ்.சி., - எஸ்.டி., - பி.சி., உள்ளிட்ட பிரிவினருக்கு பகிர்ந்து அளிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Lion Drsekar
ஏப் 26, 2024 14:31

இவர்கள்தான் தவறு நடக்கும் இடத்தில தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்து நாட்டைக்காப்பற்றவேண்டும் வந்தே மாதரம்


சந்திரன்,போத்தனூர்
ஏப் 26, 2024 07:55

இரண்டு குழந்தைகளை பெற்றவர்கள் நாட்டுக்கு வரி செலுத்துகிறார்கள் பத்து குழந்தையை பெற்றவர்கள் மானியம் பெறுகிறார்கள்.


SUBBU,MADURAI
ஏப் 26, 2024 07:35

SC, ST போன்ற தாழ்த்தப்பட்ட தலித் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்காக மட்டுமே உள்ள இட ஒதுக்கீட்டில் அவர்களுக்கு தீங்கிழைக்கும் விதத்தில் அதில் ஓட்டையை போட்டவர் அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதிதான் அவர்தான் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு மட்டுமே இருந்த அவர்களின் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு என்ற பெயரில் மத அடிப்படையிலான முஸ்லீம் மதத்தினருக்கான இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து பட்டியலின மக்களுக்கு உள்ள உரிமையை பறித்தார் அதுவரை தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு மட்டுமே என்று இருந்த இட ஒதுக்கீட்டை தன் சுயநல அரசியல் ஓட்டு லாபத்திற்காக மதத்திற்கான இட ஒதுக்கீடாக மாற்றி பட்டியலின மக்களுக்கு துரோகத்தை செய்தவர் திருவாளர் கருணாநிதியேதான் ஆக மொத்தம் எந்த ஒரு முறை தவறிய துரோக செயலுக்கும் மூல ஆதாரமாக விளங்குபவர் முத்தமிழ் வித்தகர் மு.கருணாநிதியாகத்தான் இருப்பார்.


Kasimani Baskaran
ஏப் 26, 2024 06:17

மதம் மாறுவது என்பது ஒருவர் சமூகத்தில் முன்னேறியதாக கருதப்பட்டது அதனால் ஒரு படி மேலெ சென்றதாக எடுத்துக் கொண்டு இட ஒதுக்கீட்டை அனுபவிக்கத்தான் செய்தார்கள் இப்பொழுது மதமாற்றம் செய்தாலும் இட ஒதுக்கீட்டை விட்டுக் கொடுக்க வேண்டாம் என்கிறார்கள் இதைப்போல மதமாற்றத்தை ஊக்குவிக்கும் தொழில்நுணுக்கம் வேறு எங்கும் கிடையாது அரசியல் சாசனத்துக்கு எதிரான, மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது மத மாற்றத்தை அரசே முன்னின்று ஊக்குவிப்பது போலத்தான்


Sathyan
ஏப் 26, 2024 05:09

இதிலிருந்து ஒன்று நமக்கெல்லாம் தெளிவாக புரிய வேண்டுவது என்னவென்றால் , காங்கிரஸ் ஆட்சி இந்தியாவை முஸ்லீம் நாடாக மாற்ற எந்த விதமான யுக்திகளையும் கையாளும் என்று இதன் மூலம் நமக்கு தெரிகிறது


R Kay
ஏப் 26, 2024 03:06

படிப்பிற்கு மட்டுமே இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மற்றவர்களோடு போட்டி போடுமளவுக்கு வாய்ப்பு கிடைத்தவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் இன்னும் எத்தனை காலம்தான் குடும்பம் மட்டும் வளர்ப்பு சூழ்நிலையை காரணமாக சொல்லிக்கொண்டிருக்க முடியும்? ஆண்டுகளாக இவை மாறாததன் காரணம் என்ன? தகுதி அடிப்படையிலேயே வேலை வழங்கப்பட வேண்டும் அப்போதுதான் சிறந்த முறையில் பனி நடக்கும் ஆட்சியாளர்களின் வக்கீல்களும், மருத்துவர்களும், கணக்கர்களும் சிறந்த தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா அல்லது இடஒதுக்கீடு முறையிலா? மக்களை குடிக்க வைப்பதில் காட்டும் அக்கறையை அவர்கள் பொருளாதார நிலை மற்றும் self confidence ஏற்றம் இவற்றில் அரசு காண்பிப்பதில்லை


தாமரை மலர்கிறது
ஏப் 26, 2024 02:29

மணிப்பூர் கலவரத்தை தூண்டிவிட்ட காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், இந்தியாவில் தினமும் ஒரு வெடிகுண்டு வெடிக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தினம் ஒரு வெடிகுண்டு இலவசம் என்று இருக்கிறது


Dharmavaan
ஏப் 26, 2024 01:23

ஏன் எல்லாம் மு ஸ்லிமை பிடித்து தொங்குகின்றன ஹிந்துக்களுக்கு பேராபத்து இது தடுக்கப்பட வேண்டும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை