உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்., எதிரானது: சொல்கிறார் அமித் ஷா

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்., எதிரானது: சொல்கிறார் அமித் ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்கிரஸ் எதிரானது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா மாவட்டத்தில், நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. பா.ஜ., முழுப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்கிரஸ் எதிரானது. 1980ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா ஓ.பி.சி., இடஒதுக்கீட்டை எதிர்த்தார்.

முஸ்லீம் இடஒதுக்கீடு

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கியது. அவர்கள் இங்கு ஆட்சி அமைத்தால் இங்கேயும் அதுதான் நடக்கும். ஹரியானாவில் முஸ்லீம் இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். கடந்த 15 நாட்களில் ஹரியானா மாநிலத்திற்கு அமித்ஷா 2 முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

K.n. Dhasarathan
ஜூலை 17, 2024 14:01

ஹரியானாவில் கதை அடிப்பதை விட்டு விட்டு, மணிப்பூருக்கு அல்லது கஸ்மீருக்கோ போயி ஒரு உள்துறை அமைச்சர் போல வேலையை பாருங்கள், அமைதி பேச்சு வார்த்தை நடத்தாமல் தானாகவே எதுவும் நடக்காது. இதில் காஸ்மீர் அமைதி பூங்கா என்று பிரதமர் வெளியில் பேசினார், என்ன நடக்கிறது ? பொய்களுக்கு ஒரு அளவு இல்லையா ?


தாமரை மலர்கிறது
ஜூலை 16, 2024 21:12

பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரியே பிற்படுத்தப்பட்ட சாதி கோட்டாவை உபயோகப்படுத்தும் பணக்கார செல்வந்த செழிப்பாக இருப்பவர்களே. ஏழை தலித்திற்கு எதிரி பணக்கார தலித்தே. ஒவ்வொரு சாதி ஏழைக்கும் எதிரி, அவரது சாதியை சேர்ந்த பணக்காரர்கள் தான். ஏழைகளை தவிர எவருக்கும் கோட்டா கிடையாது என்று கொண்டுவருவது சரி.


Balasubramanian
ஜூலை 16, 2024 20:45

டகா டக் பணம் தருகிறேன் என்று ஏமாற்றி தொகுதிகளை வென்று அவர்களை ஏமாற்றுவது எவ்விதத்தில் நியாயம் (ஆட்சியை பிடித்து இருந்தால் கூட பட்ஜெட்டில் பணம் இருந்திருக்காது)


Narayanan Muthu
ஜூலை 16, 2024 20:37

நடைமுறையில் யார் பிற்படுத்தப்பட்டவருக்கு எதிரி என்பதை மக்கள் அறிவார்கள். நீங்கள் கரடியாக கத்தினாலும் இனி பிற்படுத்தப்பட்டவர்கள் ஆதரவு உங்களுக்கு கிடைப்பது சந்தேகமே


venugopal s
ஜூலை 16, 2024 19:18

காங்கிரஸ் கட்சி முதலில் ஹிந்துக்களின் எதிரி, பிறகு சிறுபான்மையினருக்கு எதிரி, இப்போது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரி என்று தினமும் ஒன்று சொல்வதை விட மொத்தமாக ஒரு பெரிய லிஸ்ட் போட்டு ஒரேயடியாக சொல்லி விடலாமே!


Rajah
ஜூலை 16, 2024 18:06

இது தமிழ் நாட்டு மக்களுக்குப் புரியவில்லையே.


ஆரூர் ரங்
ஜூலை 16, 2024 17:54

OBC இடஒதுக்கீட்டை ஆதரித்து அதிகமாகப் பேசித்தான் லோக்சபா தேர்தலில் முற்பட்டோர்கள் உங்களைப் புறக்கணித்தனர். பட்டியலின வளர்ச்சியைத் தூக்கிப் பிடித்ததால் பிற்பட்ட வகுப்பினர் ஆதரவுக்கும் ஆபத்து வந்தது. இங்குள்ள சாதீய போக்கு குழப்பமான ஒன்று.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 16, 2024 21:44

அந்த விஷயத்தில் காங்கிரஸ் நேக்காக அரசியல் செய்தது .......... சாதி, மத அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட கட்சி அது .....


sundarsvpr
ஜூலை 16, 2024 16:27

பாரதம் விடுதலை பெற்று 77 ஆண்டுகள் கடந்துவிட்டது. முற்பட்ட வகுப்பினரை தவிர்த்து இதர வகுப்பினர்ட்களுக்கு சலுகைகள் வழங்கியும் தாழ்த்தப்பட்டவர் மிகவும் பின்தங்கிய வகுப்பினீர்கள் எதிர்பார்த்த பலன் அடையவில்லையெனின் சட்டத்தின் குறைபாடு என்று கூறமுடியாது. முற்பட்ட வகுப்பினிற்கு கீழ்ப்பட்ட அடுத்த வகுப்பினீர்கள் மட்டும் கூடுதல் பலன்களை பெற்றுள்ளனர் என்பதனை மறுக்கமுடியாது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை