உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதமாற்றம் செய்வது உரிமையாகாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி!

மதமாற்றம் செய்வது உரிமையாகாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி!

பிரயாக்ராஜ்: 'குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவதற்கு உள்ள உரிமை அனைவருக்கும் பொதுவானது. குறிப்பிட்ட மதத்துக்கு மற்றவர்களை மதமாற்றம் செய்யும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு சட்டவிரோத மத மாற்ற தடுப்புச் சட்டம், 2-021ல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் கீழ், மஹராஜ்கஞ்சைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் ராவ் நாயக் கைது செய்யப்பட்டு உள்ளார்.ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால், அதை நிராகரித்தார்.

வற்புறுத்தல்

உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: மஹராஜ்கஞ்சில் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த ஏழை எளிய மக்களை மத மாற்றம் செய்யும் நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கின்றன. இதுபோன்ற ஒரு மத மாற்ற நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லபட்ட ஒருவர், அங்கிருந்து தப்பி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அளித்த அந்த நபரின் வாக்குமூலத்தின்படி, குறிப்பிட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்களை அழைத்து, நோய்களில் இருந்தும், வறுமையில் இருந்தும் விடுபட, கிறிஸ்துவ மதத்துக்கு மாறும்படி வற்புறுத்தியுள்ளனர். மேலும் பலரை கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்துள்ளனர். உத்தர பிரதேச சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தின்படி, இவ்வாறு ஆசைகாட்டி, வற்புறுத்தி, மூளைச் சலவை செய்து மதமாற்றம் செய்வது குற்றமாகும். போலீசாருக்கு தகவல் தெரிவித்தவர், தன்னை கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்ய முயற்சி நடந்ததாகக் கூறியுள்ளார். மேலும், பலரையும் கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றியுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்க முடியாது.நம் அரசியலமைப்பு சட்டத்தின் 25வது பிரிவின்படி, ஒருவர் தாம் விரும்பிய தொழில் செய்தல், மனதில் உருவாகும் கருத்தை சுதந்திரமாக தெரிவிப்பது, மத நம்பிக்கைகளை பின்பற்றுவது ஆகிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

உரிமை

அரசியலமைப்பு சட்டத்தின் இந்த பிரிவின்படி, ஒருவர் தான் விரும்பும் அல்லது பின்பற்றும் மதத்தை கடைப்பிடிக்கலாம்; அது தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம். அதே நேரத்தில் மற்றவர்களை மதமாற்றம் செய்யும் உரிமை அதில் வழங்கப்படவில்லை.விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமை உங்களுக்கு உள்ளதுபோல், மற்றவர்களுக்கும் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களை மதமாற்றம் செய்வதை உரிமையாக கருத முடியாது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுத்த நீதிபதி!

உத்தர பிரதேசத்தின் ஹாமிர்புர் மாவட்டத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட தன் சகோதரர் ராம்பாலை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முயன்றதாக, ராம்காளி பிரஜாபதி என்ற பெண் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் சமீபத்தில் அளித்த உத்தரவில், மதமாற்றம் தொடர்பான பிரச்னை குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார், 'மதப் பிரசாரம் என்பது அந்த மதத்தை பற்றிய கருத்துகளை பரப்புவது தானே தவிர, ஒருவரை அவரது சொந்த மதத்தில் இருந்து வேறொரு மதத்துக்கு மாற்றுவது அல்ல. 'எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற சமூகத்தினரை சட்டவிரோதமாக கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றுகின்றனர். 'இது போன்ற மதக் கூட்டங்கள் நடப்பதை உடனடியாக நிறுத்தவில்லை எனில், நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் ஒருநாள் சிறுபான்மையினராக மாறிவிடுவர்' என, தெரிவித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Godyes
ஜூலை 13, 2024 13:33

என் வழி எனக்கு.ஏண்டா மக்கள் சமுதாயம் ஒரே வழியில் தான் செல்லும்.அதில் என்னடா உனக்கு மட்டும் தனி வழி. வெளிநாட்டு பெட்ரோல் துட்ல சிறுபான்மை போர்வையில் நீ இங்க இப்படி தெனா வெட்டில் பேசற


Barakat Ali
ஜூலை 12, 2024 17:29

உன் வழி உனக்கு ...... என் வழி எனக்கு ..... இதுதான் இஸ்லாத்தின் கொள்கை ....


Barakat Ali
ஜூலை 12, 2024 17:28

ஆசைகாட்டி, வற்புறுத்தி, மூளைச் சலவை செய்து மதமாற்றம் செய்வது குற்றமாகும். ........... தொண்ணூற்றொன்பது சதவிகித மதமாற்றங்கள் அப்படித்தான் நடக்கின்றன .....


Sampath Kumar
ஜூலை 12, 2024 09:52

மதம் மாற்றம் செய்பவனுக்கு தண்டனையும் சரி தானாகவே முன் வந்து ஒருவன் அவனுக்கு பிடித்த மதத்தை ஏற்று கொண்டால் என்ன செய்வீர்கள்?/ உங்க சட்டம் என்ன சேயும்? ஆர்யா சங்களின் அயோக்கியத்தனத்தில் சிக்கி சின்ன பின்னமாகி உள்ளது தமிழர்களின் மதம் அது ஹிந்து மதம் அல்ல ஆர்யா கும்பல் அப்படி சொல்ல சொல்லும் கேடுகேட்ட இந்த அயோக்கிய கும்பலால் நமதுதமிழர்களின் பாண்டிய வழிபாடு தெய்வங்கள் எல்லாம் கண்ணம்மாள் போனது யாரு காரணம் இந்த அயோக்கிய கும்பல் தான் கோவிலை காட்டியது யாரு ? அனல் அதற்குள் புகுந்து கொண்டு சட்டம் பேசுவது யாரு உண்மையில் இந்த கும்பலுக்கு தன்மான உணர்வு இருந்தால் கோவிலை விட்டு வெளியேறு பார்க்கலாம் முடியாது இல்ல இருந்தே கழுத்தருக்கும் அரக்கர்கூடம் அப்படித்தானே


ஆரூர் ரங்
ஜூலை 12, 2024 11:39

கண்ணம்மாள் எங்கு சென்றார்? பதிவே புதிராக உள்ளது


hari
ஜூலை 12, 2024 14:38

ஏதோ சொல்ல வரீங்க பாஸ்... ஆன. புரியிற மாறி சொல்லுங்க... சும்மா கண்ணம்மாள் பொன்னம்மாள் கதை எல்லாம் வேண்டாம்


hari
ஜூலை 12, 2024 14:39

அப்போ விருப்பப்பட்டு ஹிந்தி படித்தால் உன் திராவிடர்த்திக்கு நோகுமா... சம்பத்து


தமிழ்வேள்
ஜூலை 12, 2024 15:48

சம்பத்து அண்ணாச்சி புலம்புவதை பார்த்தால் , மதமாற்றம் செய்வதை கண்டுகொள்ளாமல் இருக்க ஒரு கணிசமாக தொகை ரெகுலர் கப்பமாக வருவது உறுதியாகிறது ..இல்லையென்றால் ஏன் இந்த பதற்றம் ? தடுமாற்றங்களுடன் ஒரு சப்பைக்கட்டு பதிவு ? எல்லாம் சரி சம்பத்து ...யார் அந்த பாண்டியநாட்டு கண்ணம்மாள் ?


சந்திரசேகர்
ஜூலை 12, 2024 06:17

தமிழ் நாட்டில் இந்த மதமாற்றும் வியாபாரம் நன்றாக இருக்கிறது. ஆள் பிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும்


sankaranarayanan
ஜூலை 12, 2024 05:43

உச்ச நீதிமன்ற அரசர்களே இதுபோன்ற சட்டம் தமிழகத்தில் எப்போது வரும் எப்போது அது அமலாகும்


Kasimani Baskaran
ஜூலை 12, 2024 05:12

மதமாற்றத்தை தீர்ப்பின் மூலம் கட்டுப்படுத்துவது சிரமம். ஆனால் மதமாற்றம் செய்பவர்கள் மீது வழக்குத்தொடுத்து தண்டனை வாங்கிக் கொடுத்தால் பொது மக்களுக்கும் கூட அது ஒரு வகை தெம்பை கொடுக்கும். இதே போல திராவிட மதத்தில் தங்களை இணைத்துக் கொண்டால் வாழ்வு சிறக்கும், பகுத்தறிவு வரும் என்று சொன்ன திராவிட மத சாமியார்களின் ஏமாற்று வேலைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உபிஸ் படும் அவமானங்களை சொல்லி மாளாது. ஆனாலும் உபிஸாகத்தான் இருப்பேன் என்று பிடிவாதமாக இருக்கும் அவர்களை திருத்த நீதித்துறைதான் ஏதாவது யோசனை சொல்ல வேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை