உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அருந்ததி ராய் மீது வழக்கு டில்லி கவர்னர் ஒப்புதல்

அருந்ததி ராய் மீது வழக்கு டில்லி கவர்னர் ஒப்புதல்

புதுடில்லி, காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், எழுத்தாளர் அருந்ததி ராய் உட்பட இருவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர டில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 2010ல் டில்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், ஜம்மு - காஷ்மீர் மத்திய பல்கலையின் முன்னாள் பேராசிரியை ஷேக் சவுகத் ஹுசைன் ஆகியோர் காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுஷில் பண்டிட் என்பவர் இருவர் மீதும் வெவ்வேறு சமூகங்களுக்கு இடையே பகையை வளர்த்தல், தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தார். இதுபோன்ற குற்றச் செயல்களை விசாரிக்கும் தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அரசின் அனுமதி அவசியம் என்ற நிலையில், வழக்குப் பதிவு செய்ய டில்லி துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனா கடந்த ஆண்டு அக்டோபரில் அனுமதிஅளித்தார். இந்நிலையில், அவர்கள் இருவர் மீது தேசிய சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர கவர்னர் வி.கே. சக்சேனா தற்போது அனுமதி அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை