உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணை முதல்வர் பதவி பேச்சு  அமைச்சர் ராஜண்ணா அடம்

துணை முதல்வர் பதவி பேச்சு  அமைச்சர் ராஜண்ணா அடம்

பெங்களூரு: ''கர்நாடகா துணை முதல்வர் பதவி குறித்து தொடர்ந்து பேசுவேன்,'' என, அமைச்சர் ராஜண்ணா அடம் பிடித்து வருகிறார்.கர்நாடக கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:துணை முதல்வர் பதவி குறித்து, பொது இடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேச வேண்டாம் என, துணை முதல்வர் சிவகுமார் மென்மையாக கூறியிருந்தால், அதை நான் ஆமோதித்து இருந்திருப்பேன்.ஆனால் நோட்டீஸ் கொடுப்பேன் என மிரட்டும் வகையில் பேசுகிறார். துணை முதல்வர் பதவி குறித்து நான் தொடர்ந்து பேசுவேன்.எனக்கு நோட்டீஸ் கொடுத்தால், அதற்கு பதில் அளிக்கவும் தயார். சிவகுமார் மிரட்டலுக்கு மற்றவர்கள் வேண்டுமென்றால் பயப்படலாம். துணை முதல்வர் பதவி குறித்து பேசினால் என்ன தவறு?சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, சிவகுமாரை முதல்வராக வேண்டுமென்று யாரோ நினைத்தால், அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க வேண்டுமா?காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் தான், சித்தராமையா முதல்வர் ஆனார். பெங்களூரு ரூரலில் சுரேஷ் தோற்றுப் போனதற்கு, சந்திரசேகர சுவாமிகள் உட்பட பலர் காரணம்.பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணி ஆட்சிக்கு வந்தால், எதிர்க்கட்சித் தலைவர் அசோக் முதல்வர் ஆவாரா என்பது எனக்கு தெரியாது. கூட்டணி கட்சித் தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு உட்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை