உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறை உணவு வேண்டாம்: வீட்டு உணவு கேட்கும் நடிகர் தர்ஷன்

சிறை உணவு வேண்டாம்: வீட்டு உணவு கேட்கும் நடிகர் தர்ஷன்

பெங்களூரு: வீட்டு உணவு வழங்க அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் கன்னட நடிகர் தர்ஷன் மனு செய்துள்ளார்.கர்நாடகாவின் முன்னணி நடிகர் தர்ஷன், இவர் தன் காதலி பவித்ரா கவுடாவுக்கு, சித்ரதுர்காவின் ரேணுகாசாமி, 33, ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததால், நடிகர் தர்ஷன், அவரை கொன்றார். தற்போது பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார்.தர்ஷன் சிறைக்கு வந்த போது, அவரது உடல் எடை 107 கிலோ இருந்தது. ஒரே மாதத்தில் 10 கிலோ எடை குறைந்து, 97 கிலோவுக்கு வந்துள்ளார். சிறையில் அளிக்கப்படும் உணவு, மன அழுத்தம் போன்ற காரணங்களால், அவரது எடை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து நேற்று கர்நாடகா ஐகோர்ட்டில் மனு செய்துள்ளார். அதில் தனக்கு சிறை உணவு சாப்பிட முடியவில்லை எனவும், வீட்டிலிருந்து உணவு கொண்டுவர அனுமதிக்குமாறு கோரியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சித்தேகௌடா
ஜூலை 10, 2024 19:40

வீட்டிலிருந்து ராகி மொத்தை, அதான் களி செய்து தரச் சொல்லுங்க.


angbu ganesh
ஜூலை 10, 2024 10:17

அப்போ ஒடம்பு எடை குறைக்க ஆச படவரங்க எல்லாம் ஜெயிலுக்கு போகலாம்


Balasubramanian
ஜூலை 10, 2024 09:22

கொலை செய்தவனுக்கு செவன் ஸ்டார் விருந்து! விசாரணை முடிந்து தீர்ப்பு வருவதற்குள் நான் அவனில்லை என்று வெளியில் வராமல் இருந்தால் சரி!! ஏற்கனவே ஒருவர் உச்ச நீதிமன்றம் வரை தன் அண்ணன் பெயரை உபயோகித்து ஏமாற்றி வந்து இருக்கிறார்


V RAMASWAMY
ஜூலை 10, 2024 08:46

பிரபல நடிகராக இருந்தாலென்ன, குற்றவாளி என்று கருதும்போது, அனைத்து குற்றவாளிகளாக கருதப்படுவர்களுக்கு என்ன விதிமுறைகளோ அவை தான் இவருக்கும். இதன் பெயர் தான் சமத்துவம்.


வாய்மையே வெல்லும்
ஜூலை 10, 2024 08:13

பேசாம பார்க் ஷெரட்டன் உணவக கிளையை எல்லா குற்றவியல் ஸ்தாபனத்திலும் இயங்கினால்... குற்றம் செய்பவர்கள் விதவிதமான கறிக்குழம்பு விருந்து எடுத்து மகிழ்ச்சிக்கு குறைவில்லாத சிறைவாசம் அனுபவிக்கலாம் ஓண்ணு தெரியுது... எல்லா குற்றம் செஞ்ச கயவனும் சொகுசு வாழ்க்கை சிறையிலும் எதிர்பார்க்கிறான் .


நிக்கோல்தாம்சன்
ஜூலை 10, 2024 06:08

ஆமா ஆமா திமிர் அடங்கவேண்டும் என்றால் சிறை உணவு தான் சரி


Mani . V
ஜூலை 10, 2024 03:43

இந்த நாய்க்கு வீட்டுச் சாப்பாட்டை அனுமதிக்கக்கூடாது. இவன் திருமணம் ஆனவன். ஆனால் இவன் மட்டும் கள்ளக் காதலி வைத்துக் கொள்வானாம். அந்த கள்ளக் காதலிக்கு வேறு ஒருவர் ரூட்டு விட்டா தப்பாம்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை