உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோடை வெயிலில் கருப்பு கோட் வேண்டாமே... சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் கோரிக்கை

கோடை வெயிலில் கருப்பு கோட் வேண்டாமே... சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் கோரிக்கை

புதுடில்லி, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் ஆஜராகும்போது, கருப்பு நிற கோட் மற்றும் அதன் மேல் கருப்பு நிற கவுன் அணிவது, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து பழக்கத்தில் உள்ளது. நாடு சுதந்திம் அடைந்த பின், 1961ல் இயற்றப்பட்ட வழக்கறிஞர் சட்டத்திலும், இந்த கருப்பு நிற உடை அணிவது இடம் பெற்றுள்ளது.இந்நிலையில், வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதன் விபரம்:வெயில் சுட்டெரிக்கும் கோடை காலத்தில், நீதிமன்றங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் கருப்பு நிற கோட் மற்றும் கவுன் அணிவது பல்வேறு உடல்நல கோளாறுகளை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, இந்த ஆடையை அணிந்து கொண்டு வழக்கறிஞர்கள் தங்கள் பணியை திறம்பட மேற்கொள்ளவும் சிரமப்படுகின்றனர். இதனால் அவர்களின் பணிகளிலும் பாதிப்பு ஏற்படுகின்றன. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் அமலுக்கு வந்த இந்த ஆடை முறை, நம் நாட்டின் தட்பவெப்ப நிலையை கருத்தில் வைக்காமல் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, வழக்கறிஞர்கள் சட்டம் 1961ல் திருத்தம் மேற்கொண்டு, கோடை காலங்களில், வழக்கறிஞர்கள் கருப்பு கோட் மற்றும் கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
மே 28, 2024 12:51

தோள்பட்டை வலி காரணமாக பல மூத்த வழக்கறிஞர்கள் கனமான வக்கீல் கோட். அணிந்து பணி செய்ய சிரமப்படுகின்றனர். எனவே அதற்கு பதில் குறிப்பிட்ட வண்ண காலர் அல்லது டை மட்டும் அணிந்து வரச் சொல்லலாம்.


Muralidharan raghavan
மே 28, 2024 10:31

இதெல்லாம் வெள்ளையன் அவர்கள் நாட்டில் குளிர் காரணமாக அணிந்து இருப்பார்கள் என்று தோன்றுகிறது. அவர்கள் இந்த நாட்டை ஆளுகின்றபோது அவர்களுடைய மதம், கலாச்சாரம் எல்லாவற்றையும் இங்கு புகுத்தி விட்டார்கள். நாடு சுதந்திரம் பெற்று எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இனியும் அவர்களது கலாச்சாரம் உடைகளை நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.


Dharmavaan
மே 28, 2024 08:44

கருப்பு நிறம் வெய்யிலை ஈர்க்கும் சூரிய அடுப்புகள் உதாரணம் இது எப்படி நீதித்துறைக்கு வந்தது அசுபமான நிறம் எனவே மனு சரியானதே


Mani . V
மே 28, 2024 06:21

இந்த மண்ணு மூட்டையெல்லாம் என்ன எழவைப் படித்திருப்பார்களோ? என்றே தெரியவில்லை. கருப்பு நிறம் சூரிய ஒளியை அதிகம் பிரதிபலிக்கும் என்பதால்தான், குடைகள் கருப்பு நிறத்தில் தயாரிக்கப்படுகிறது. இவர்கள் என்னமோ அறுத்துத் தள்ளுவது மாதிரி கருப்பு கோட் அணிவதில் இருந்து விலக்கு கேட்கிறார்கள். ஏன் வெய்யிலுக்கு நீச்சல் உடையில் வர அனுமதி கோரலாமே? இதுபோல் அனைத்து துறையினரும் விலக்கு கேட்டால் என்னவாகும்?


Kasimani Baskaran
மே 28, 2024 05:55

கோடையில் கோர்ட்டே வேண்டாம் என்று சொல்வதை விட்டுவிட்டு சட்டையில்லாமல் வெறும் பனியனில் வேலை செய்வோம் என்று சொல்லி சம்பாதிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி இருக்கிறார்கள்.


Dharmavaan
மே 28, 2024 08:45

பச்சை வெள்ளை நீல நிறங்கள் இருக்கலாம்


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ