உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே மாதத்தில் 308 மீட்டர் நீள சுரங்கம் தோண்டிய துங்கா

ஒரே மாதத்தில் 308 மீட்டர் நீள சுரங்கம் தோண்டிய துங்கா

பெங்களூரு : காளேன அக்ரஹாரா - நாகவாரா இடையே, சுரங்கம் தோண்டும் துங்கா டி.பி.எம்., இயந்திரம், ஜூலை மாதம் 308 மீட்டர் நீள சுரங்கம் தோண்டியுள்ளது.பெங்களூரு மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:காளேன அக்ரஹாரா - நாகவாரா இடையே சுரங்கம் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 13 கி.மீ., தொலைவில் மூன்று கட்டங்களாக சுரங்கம் தோண்டப்படுகிறது. இரண்டு கட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.மூன்றாம் கட்டத்தில், கே.ஜி., ஹள்ளியில் இருந்து, நாகவாரா வரை 935 மீட்டர் நீள சுரங்கம் தோண்டும் பணிகளை, 'துங்கா, பத்ரா' டி.பி.எம்., இயந்திரங்கள் மேற்கொண்டிருந்தன.நடப்பாண்டு பிப்ரவரி 2ல், தெற்கு முகமாக துங்காவும், ஏப்ரல் 2ல் வடக்கு முகமாக பத்ராவும், சுரங்கம் தோண்டும் பணிகளை துவங்கின. துங்கா இயந்திரம், ஜூலை இறுதியில், 82 சதவீதம் பணிகளை முடித்தது.ஜூலை மாதம் மட்டுமே 308 மீட்டர் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் பணி முழுமையடையும் என, அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். பிங்க் மெட்ரோ பாதைக்காக, துங்கா இயந்திரம் இதுவரை 3,221 மீட்டர் நீள சுரங்கம் தோண்டியது. பத்ரா டி.பி.எம்., இயந்திரமும், மும்முரமாக சுரங்கம் தோண்டி வருகிறது. இதுவரை 315 மீட்டர் நீள சுரங்கம் தோண்டியது. மேலும் 624 மீட்டர் சுரங்கம் தோண்ட வேண்டியுள்ளது.சுரங்கம் தோண்டி முடித்த இடங்களில், தண்டவாளம் பொருத்தும் பணிகள் நடக்கின்றன. சிவில் பணிகள் நடக்கின்றன. மெட்ரோ ரயில் நிலையம் கட்டும் பணிகளும் நடக்கின்றன. 2026 இறுதியில், காளேன அக்ரஹாரா - நாகாவரா பிங்க் பாதையில், வர்த்தக போக்குவரத்து துவங்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ