உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மலேஷியா விமானத்தில் இன்ஜினில் தீ

மலேஷியா விமானத்தில் இன்ஜினில் தீ

புதுடில்லி, ஹைதராபாதில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்ற விமானம் நடுவானில் சென்றபோது, திடீரென தீப்பற்றியதால் பயணியர் அதிர்ச்சியடைந்தனர். தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாதில் இருந்து, தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் கோலாலம்பூர் நகருக்கு மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை புறப்பட்டு சென்றது. ஏறத்தாழ, 130 பயணியர் மற்றும் விமான ஊழியர்களுடன் சென்ற அந்த விமானத்தில், புறப்பட்ட 15வது நிமிடத்தில் வலது இன்ஜினில் திடீரென தீப்பற்றியதை பைலட் கண்டறிந்தார்.இது குறித்து பயணியரிடம் எச்சரித்த ஊழியர்கள், விமானத்தை அவசரமாக தரையிறக்க கட்டுப்பாடு அறையை தொடர்பு கொண்டனர். அவர்கள் அனுமதி அளித்ததை தொடர்ந்து, விமானம் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் சற்று நேரம் வானத்தில் வட்டமிட்டது.பின் விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகள் வழிகாட்டுதலின் படி பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்டது.விமானத்தில் தீப்பற்றியதை பைலட் கண்டறிந்து, அவசரமாக தரையிறக்கியதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. நடுவானில் விமானத்தில் தீப்பற்றியது குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை