மேலும் செய்திகள்
இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
1 hour(s) ago
புதுடில்லி:தெற்கு டில்லியில், வேலை செய்த வீட்டில் 49 லட்சம் ரூபாய் பணம் திருடிய பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் ஹரியானாவில் கைது செய்யப்பட்டனர்.ஹவுஸ் காஸ் பகுதியில் ஒரு வீட்டில் 28 வயது பெண் சமையல் வேலை செய்து வந்தார். கடந்த 7ம் தேதி வீட்டின் பீரோவில் இருந்து 49 லட்சம் ரூபாயை திருடிய அந்தப் பெண் தலைமறைவானார்.வீட்டு உரிமையாளர் ஹவுஸ் காஸ் போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பெண்ணின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.அந்தப் பெண் போட்டோ அண்டை மாநில போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், அந்தப் பெண் பயன்படுத்திய மொபைல் போன் எண்ணை ஆய்வு செய்த போது, முபாரிக் என்பவருடன் தினமும் பல முறை பேசியது தெரிய வந்தது. ஹரியானா மாநிலம் பானிபட்டில் வசித்த முபாரிக் மற்றும் அவருடன் இருந்த வீட்டு வேலைக்கார பெண் இருவரையும் டில்லி போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட பணம் மீட்கப்பட்டது. அந்தப் பெண், கணவர் இறந்ததிலிருந்து ஷாப்பூர் ஜாட்டில் ஒரு வாடகை வீட்டில் 34 வயதான முபாரிக் உடன் வசித்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
1 hour(s) ago