உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரதட்சணையால் பெண் தற்கொலை

வரதட்சணையால் பெண் தற்கொலை

சிக்கமகளூரு : வரதட்சணை கொடுமையால் பெண் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கணவரிடம் விசாரணை நடக்கிறது.சிக்கமகளூரு, மூடிகெரே சந்துவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன், 27. இவரது மனைவி சுபிக் ஷா, 25. கடந்த 2020ல் இருவருக்கும் திருமணம் நடந்தது. 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.திருமணத்தின்போது பிரவீனுக்கு மனைவி வீட்டார் நகை, பணம் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி மனைவியிடம், சில மாதங்களாக பிரவீன் தகராறு செய்தார்.ஆனால் வரதட்சணை வாங்கி வர சுபிக் ஷா மறுத்தார். இதனால் அவருக்கு கணவர் தொல்லை கொடுத்து வந்தார். மனம் உடைந்த சுபிக் ஷா நேற்று காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரிடம் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை