உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிதி அமைச்சர் நிர்மலா அறிவித்தார் சலுகை !

நிதி அமைச்சர் நிர்மலா அறிவித்தார் சலுகை !

புதுடில்லி: 2024- 25 ம் நிதி ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை இன்று (ஜூலை -23) நிதி அமைச்சர் நிர்மலா தாக்கல் செய்தார். இன்றைய பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் ஏதுமில்லை. ரூ. 3 லட்சமாக தொடர்கிறது. அதே நேரத்தில் மாத வருமானம் உள்ளவர்கள் பெறும் நிரந்தர கழிவு வரிச்சலுகை 50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி, மொபைல்போன் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதால் தங்கம் மற்றும் போன் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏழைகள், பெண்கள், இளைஞர் திறன் மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நிர்மலா தெரிவித்தார்.

9 அம்சங்களுக்கு முன்னுரிமை

''இந்த பட்ஜெட், 'வேளாண் உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய மனித வள மேம்பாடு, தொழில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை, நகர்ப்புற வளர்ச்சி, ஆற்றல் மேம்பாடு, உள்கட்டமைப்பு, புதுமை ஆராய்ச்சி, சீர்திருத்தங்கள்' ஆகிய 9 அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது'' என்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hutcpki1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்றைய பட்ஜெட்டை தாக்கல் நிதி அமைச்சர் நிர்மலா கூறுகையில் இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளதாகவும், இது தொடர்ந்து நீடிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் பட்ஜெட் உரையில் இடம்பெற்ற அம்சங்கள் விவரம் வருமாறு: * ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் திட்டம் * நகர்ப்புற நில ஆவணங்கள் டிஜிட்டல் மயமாகும்* விண்வெளி வளர்ச்சி திட்டங்களுக்கு ஆயிரம் கோடி நிதி* இளைஞர்களுக்கு 1000 தொழில் பயிற்சி நிறுவனங்கள்* வேளாண் திட்டங்களுக்கு ரூ. 1.52 லட்சம் கோடி நிதி* இளைஞர்களுக்கு 1000 தொழில் பயிற்சி நிறுவனங்கள்* பீகார் வெள்ள தடுப்பு பணிக்கு 11, 500 கோடி* தனியாருடன் இணைந்து அணுஉலைகள் * பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை* பத்திரப்பதிவு கட்டணம் குறைக்க மாநிலங்களுக்கு அறிவுரை* பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ. 10 லட்சம் கோடி* வெளி மாநில தொழிலாளர்களுக்கு அரசு தங்குமிடம்* முத்ரா கடன் ரூ. 20 லட்சமாக உயர்வு* சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க திட்டம்* சென்னை - ஐதராபாத்- விசாகபட்டணம் தொழில் வழித்தடம்* ஊரக இந்தியா திட்டத்திற்கு ரூ. 2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு* 5 மாநில வளர்ச்சிக்கு மேம்பாடு சிறப்பு திட்டம்* 3 வகை புற்று நோய் மருந்துக்கான வரி விலக்கு*சிறு குறு நடுத்தர தொழில்துறையினர் வளர்ச்சிக்காக கடன் உறுதி திட்டம்* நாடு முழுவதும் 10 ஆயிரம் இயற்கை வேளாண் ஆய்வு மையங்கள்* இந்தியாவில் வேளாண் உற்பத்தியை பெருக்க புதிய ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் * நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.* இளைஞர்கள் முன்னேற்றத்திற்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு* சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி ஓதுக்கீடு* தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதமாக குறைப்பு

வரியில் என்ன மாற்றம் ?

* வருமான உச்ச வரம்பு ரூ. 3 லட்சமாக தொடர்கிறது* வருமான வரி நிரந்தரக்கழிவு ரூ. 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரமாக உயர்வு* ஆண்டு வருமானம் ரூ. 3லட்சம் முதல் 7 லட்சம் வரை 5 % வரி* ஆண்டு வருமானம் ரூ. 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை 10 % வரி* ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் 15 % வரி* ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை 20 % வரி * ஆண்டு வருமானம் ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானத்திற்கு 30 % வரி* புதிய வரி திட்டத்தால் 4 கோடி பேர் பயன்பெறுவர்* நேரடி வரிவிதிப்பை எளிமையாக்க திட்டம்;நிதி அமைச்சர்* வருமான வரி தாக்கல் தாமதம் குற்றமாக கருதப்படாது* மொபைல்போன் உதிரி பாகங்களின் சுங்கவரி குறைப்புஇந்த பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது குறித்து எதிர்கட்சிகள் குறை கூறியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சொல்லின் செல்வன்
ஜூலை 23, 2024 18:11

எனக்கு ஊதியம் 30 சதவீத பிடித்தம் செய்த பிறகே கொடுக்கப்படுகிறது. கிடைத்த 70 சதவீத ஊதியத்தில் பெட்ரோல் அடித்தால் வரி, இட்லிக்கு வரி, துணி வாங்கினால் வரி, வீட்டிற்கு வரி, தண்ணீருக்கு வரி, குண்டூசி வாங்கினாலும் வரி, குதிரை வாங்கினாலும் வரி. நான் என்னத்தை மிச்சம் செய்ய??


Nathansamwi
ஜூலை 23, 2024 18:06

May be this is the last budget of NDA govt...people need to change to change the govt


JANA VEL
ஜூலை 23, 2024 18:06

இப்போவே எரிய ஆரம்பிச்சுடுச்சா . சீக்கிரம் ஸ்டிக்கர் ரெடி பண்ணுங்க


Partha
ஜூலை 23, 2024 17:38

All our hard work money getting wasted to Bihar and AP.


ஆரூர் ரங்
ஜூலை 23, 2024 15:38

1.சென்னை ஹைதராபாத் தொழில் வழித்தட அறிவிப்பை படியுங்கள் .2. இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வேயின் எல்லாத் திட்டங்களையும் அறிவித்துவிட்டார்கள்.


sribalajitraders
ஜூலை 23, 2024 15:17

மெட்ரோ நோ.. எக்ஸ்பிரஸ் வே நோ.. நிதி உதவி நோ.. தமிழ்நாட்டிற்கு "ஜீரோ".. ஏமாற்றிய மத்திய பட்ஜெட்


முருகன்
ஜூலை 23, 2024 15:08

நாட்டில் பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மட்டுமே உள்ளது போல் பட்ஜெட்டில் முக்கியத்துவம் ஏன்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 23, 2024 14:45

ரியல் எஸ்டேட் பிஸினஸுக்கு சலுகை... கருப்புப்பணத்தைக் கூட்டும் முயற்சி... திமுகவுக்கு உதவி... கூட்டணி நிச்சயம் .....


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 23, 2024 14:43

நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் ... இதை காங்கிரஸ் காலத்துலேர்ந்து கேக்குறோம்.. கேக்குறோம் .... கேட்டுக்கிட்டே இருக்கோமுங்க ....


Velan Iyengaar
ஜூலை 23, 2024 14:25

இந்த பட்ஜெட்டில் எத்தனை இலவசங்களை அறிவித்துள்ளார்கள் என்று பட்டியல் போடட்டுமா ???


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி