உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உடுப்பியில் 200 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

உடுப்பியில் 200 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

உடுப்பி : உடுப்பியில் நேற்று காலை பெய்த கனமழையால் 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த வீடுகளில் வசித்த மக்கள், ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக, தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலையில், உடுப்பி டவுனில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளான கரம்பலி, குந்திபயலு, படிகார், மடதபட்டு, கல்சங்க பைலகெரே, மூடனி டம்பூர், மல்பே, நீட்டுரு ஐயா பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.குந்திபயலுவில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கடைகளில் இருந்த பொருட்கள் அடித்து செல்லப்பட்டன. இது பற்றி அறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ரப்பர் படகுகளை எடுத்துக்கொண்டு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று, பொதுமக்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்து சென்றனர்.

வெள்ளத்தில் சிக்கிய கார்

உடுப்பி கண்ணர்பாடி பகுதியில் நேற்று மதியம் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டது. காருக்குள் இருந்த நான்கு வாலிபர்கள் கதவை திறந்து நீச்சல் அடித்து தப்பினர். தண்ணீரில் மூழ்கிய காரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.உத்தர கன்னடாவின் கார்வாரில் பெய்த கனமழைக்கு, கார்வாரை சுற்றியுள்ள கிராமங்களில் பாக்கு தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்ததில், பாக்குகள் அழுகின.

இணைப்பு துண்டிப்பு

பெலகாவி பகுதியில் பெய்து வரும் கனமழையால், கர்நாடகா --- கோவா எல்லையில் உள்ள சோலாரா வனப்பகுதி சாலையில் பாறைகளுக்கு இடையில் இருந்து, தண்ணீர் அருவி போல ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் வாகனங்களை நிறுத்தி, மொபைல் போன்களில் உற்சாகமாக புகைப்படம் எடுத்து செல்கின்றனர். அங்கு வந்த வாலிபர் ஒருவர் குடிபோதையில், சாலையில் படுத்து உருண்டார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வாலிபரை மீட்டு அனுப்பி வைத்தனர்.சிக்கோடியில் துாத் கங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல கிராமங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழை பெய்து வரும் இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.குடகில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், ஹாரங்கி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அணையின் நான்கு மதகுகள் வழியாக, ஆற்றில் நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை