உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 15 வினாடிகள் கொடுங்கள் போதும்: பா.ஜ., பிரமுகர் பேச்சால் சர்ச்சை

15 வினாடிகள் கொடுங்கள் போதும்: பா.ஜ., பிரமுகர் பேச்சால் சர்ச்சை

புதுடில்லி, 'பதினைந்து நிமிடங்களுக்கு போலீசை அகற்றுங்கள்; எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டுகிறோம்' என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., மூத்த தலைவர் அக்பருதீன் ஓவைசி, 11 ஆண்டுகளுக்கு முன் பேசியதை குறிப்பிட்ட பா.ஜ.,வைச் சேர்ந்த நவ்னீத் ராணா, 'உங்களுக்கு 15 நிமிடம் தேவை; எங்களுக்கு 15 வினாடிகள் போதும்' என கூறியுள்ளார்.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் லோக்சபா தொகுதியின் எம்.பி.,யாக, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி, 2-004 முதல் இருந்து வருகிறார்.

பிரசார கூட்டம்

அதற்கு முன், 1984ல் இருந்து அவரது தந்தை அலாஹுதீன் ஓவைசி எம்.பி.,யாக இருந்தார். தற்போது இந்த தொகுதியில், அசாதுதீன் ஓவைசியை எதிர்த்து, பா.ஜ., சார்பில் மாதவி லதா போட்டியிடுகிறார்.கடந்த 2013ல், அசாதுதீன் ஓவைசியின் தம்பி அக்பருதீன் ஓவைசி, ஒரு கூட்டத்தில் பேசினார். ஹிந்துக்களை குறி வைத்து, '15 நிமிடங்களுக்கு போலீஸ் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்; எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டுகிறோம்' என்று அவர் பேசியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், ஹைதராபாதில் நடந்த பிரசார கூட்டத்தில், பா.ஜ.,வின் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த நவ்னீத் ராணா பேசினார்.முன்னாள் சுயேச்சை எம்.பி.,யான இவர் மிகவும் ஆக்ரோஷமாக பேசக் கூடியவர். தற்போதைய தேர்தலில் மஹாராஷ்டிராவில் அமராவதி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார்.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சவால்

நவ்னீத் ராணா பேசியதாவது: 'எங்களுக்கு 15 நிமிடங்கள் கொடுங்கள்; எங்களால் என்ன செய்ய முடியும் என்று காட்டுகிறோம்' என்று ஓவைசியின் தம்பி முன்பு பேசினார். உங்களுக்காவது, 15 நிமிடங்கள் தேவை; எங்களுக்கு 15 வினாடிகள் போதும்.ஏ.ஐ.எம்.ஐ.எம்., அல்லது காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிப்பது, பாகிஸ்தானுக்காக ஓட்டளிப்பதாக அமைந்துவிடும். பாகிஸ்தானின் அன்பும், ஆதரவும் இவர்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.மேலும், இந்த பேச்சு அடங்கிய வீடியோவை, சமூக வலைதளத்தில் நவ்னீத் ராணா பகிர்ந்துள்ளார். அதில், ஓவைசி சகோதரர்களையும் இணைத்துஉள்ளார்.

இது குறித்து, அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளதாவது:

ஏன், 15 வினாடிகள், ஒரு மணி நேரம் கூட எடுத்துக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடியிடம் கூறுகிறேன். உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் பார்க்கிறோம். எங்கு வரவேண்டும் என்பதை கூறுங்கள். உங்களை யார் தடுக்கப் போகின்றனர். நாங்கள் எதற்கும் தயார். இது போன்ற பொது சவால் விடும்போது, அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Vathsan
மே 10, 2024 12:26

அம்பாசமுத்திரம் அம்பானி கருணாஸ் ஜோடி இவள்


sankar
மே 15, 2024 12:54

அதனால என்ன சார்


Barakat Ali
மே 10, 2024 11:17

கங்கனா ரணாவத், நவநீத் ராணா இவங்க பாயுற பாய்ச்சலை பார்த்து அடுத்த பிரதமர் கனவுல இருக்குற யோகி ஆதித்யநாத் க்கு அடிவயிறு கலங்குமே ????


Sampath Kumar
மே 10, 2024 09:54

இது தான் திரு ஏடுத்த பெரும்பான்மை குணம் என்பது இவர்கள் எல்லாம் மத நல்லிணக்கத்தை பற்றி கனவில் கூட நினைக்க வாய்ப்பில்லை என்ன செய்ய டிசைன் அப்படி


Sivak
மே 10, 2024 12:58

மத நல்லிணக்கம் ஹிந்துக்களுக்கு மட்டும் தான?


தமிழ்வேள்
மே 10, 2024 08:52

எந்த ஒரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் இருக்கும் இந்த விதி ஓவைசிக்கு மட்டும் அல்ல இஸ்லாமிய மன்னர்கள் மற்றும் அந்த சமூகத்துக்கும் பொருந்தும்


Syed ghouse basha
மே 10, 2024 08:28

இது போன்ற கருத்துக்கள் யார்பேசினாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒவைசி பஜக வின் பி டீம் இந்த அம்மையார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்


sankar
மே 10, 2024 08:08

முதலில் சவால் விட்டது மிஸ்டர் தான் - ஆகவே இப்போது பினாத்துவதில் புண்ணியம் இல்லை


அப்புசாமி
மே 10, 2024 08:04

பத்து வருஷம் குடுத்தும் அந்த பாஞ்சி லட்சத்தைக் காணோம். கோவாலு


Prabakaran VK
மே 10, 2024 08:28

உங்களின் மேதாவிலாசம் கண்டு வியக்கிறேன்


theruvasagan
மே 10, 2024 08:42

அப்பு. 15 வருசத்துக்கு முன்பு அடிச்சுவிட்ட ஆளுக்கு தலா ரெண்டு ஏக்கர் நெலத்தை வாங்கிட்டு வந்துட்டு அப்புறமா இதை கேளுங்க.


angbu ganesh
மே 10, 2024 09:30

ஏன் முதல்வர் அணைத்து பெண்களுக்கும் ஆயிரம்னு சொல்லி பின்னாடி பல்டி இச்சத்து, ஐந்து சவரனுக்கு கடன் தள்ளுபடின்னு சொல்லி ஏமாத்தி வோட்டு வங்கியானது, இளம் விதவைகள் உருவாகாமல் டாஸ்மாக்க மூடுவேன்னு சொன்னது, ஏன்பா இப்படி கேள்வி கேளென்பா, வெரல் இருக்கேன்னு என்னத்தையோ டைப் பண்றது


Logu
மே 10, 2024 09:48

உனக்கு ஹிந்தியும் தெரியாது சுய அறிவும் கிடையாது என்பது தெரிகிறது கொத்தடிமை போல தெரிகிறது


Ramaraj P
மே 10, 2024 07:51

பாக்கிஸ்தான் எப்படி சிறுபான்மையினரை நடத்துகின்றனர். அதேபோல் நாமும் செய்ய முடியாதா ??


Kasimani Baskaran
மே 10, 2024 05:40

நாய் குலைத்தால் உடனே திரும்ப நாமும் குலைக்க வேண்டும் என்பதில்லை


Shekar
மே 10, 2024 09:40

கல்லால் அடிக்கவேண்டும், இல்லையேல் கடித்துவிடும் ++


Palanisamy Sekar
மே 10, 2024 05:18

ஒவைசி பேசியபோது பதினைந்து நிமிடம் அல்ல பதினைந்து வருடங்கள் கூட எடுத்துக்கொள்ளுங்கள் என்று அவர்களாலும் சொல்ல முடியும்தானே? ஒவைசிக்கு பதட்டம் இருக்கும் அளவுக்கு பக்குவமும் இருக்கணும்athu இல்லாமல் போய்விட்டது எப்படியோ இப்படி பதிலடியை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கணும் இல்லையேல் இவர்களின் வாய்ச்சவடால் அதிகரித்துக்கொண்டே போகும் பெண் எம் பி யின் துணிச்சல் பாராட்டுக்குரியதே பல்லுக்கு பல்


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ