உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வில் ஐக்கியமானார் ஹரியானா காங். பெண் எம்.எல்.ஏ.,

பா.ஜ.,வில் ஐக்கியமானார் ஹரியானா காங். பெண் எம்.எல்.ஏ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஹரியானா காங்., பெண் எம்.எல்.ஏ., கிரண் சவுத்ரி, அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.வில் ஐக்கியமானார்.ஹரியானாவின் தோஷாஹாம் தொகுதி காங்., பெண் எம்.எல்.ஏ.. கிரண் சவுத்ரி, 68 இவரது மகள் சுருதிசவுத்ரி. இருவரும் காங்.,கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்தனர்..இருவரும் டில்லி சென்று பா.ஜ., வைச் சேர்ந்த மத்திய அமைச்சரும், ஹரியானா முன்னாள் முதல்வருமான மனோகர்லால் கட்டார் முன்னிலையில் பா.ஜ.வில் ஐக்கியமானார்.

விலகல் ஏன் ?

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தன் மகள் சுருதிசவுத்ரிக்கு காங்., மேலிடம் எம்.பி.,சீட் தரவில்லை. ஆனால் முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா ஆதரவாளருக்கு சீட் வழங்கப் பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிருப்தியடைந்த கிரண் சவுத்ரி, தன் மகளுடன் பா.ஜ.வில் ஐக்கியமானார்.ஹரியானா சட்டசபைக்கு இந்தாண்டு அக்டோபரில் தேர்தல் நடக்கிறது. இந்த சூழ்நிலையில் இருவரும் கட்சியிலிருந்து விலகியது ஹரியானா காங். , கிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தாமரை மலர்கிறது
ஜூன் 19, 2024 21:32

இது வெறும் தொடக்கம் தான். தமிழக காங்கிரஸ் எம்பிகளும் விரைவில் பிஜேபியில் ஐக்கியமாவார்கள்.


Ra ja
ஜூன் 19, 2024 21:58

வெக்கமா இல்லையப்பா உங்களுக்கு


shyamnats
ஜூன் 19, 2024 20:53

மேலும், மேலும் இது போன்ற மாற்றங்களை எதிர் பார்க்கிறோம் , வரவேற்கிறோம் . விரைவாக மோடிஜியின் கரங்கள் வலுப்பெற வாழ்த்துக்கள்,


Sivakumar
ஜூன் 19, 2024 21:33

காங்கிரஸில் டிக்கெட் கொடுக்காததால் இப்போது பாஜவில் சேர்த்துள்ளார். பேரம் படிந்தவுடன் சேர்ந்துள்ளார். இது போன்ற நபர்கள் பாஜவில் வாய்ப்பு இல்லாத போது சென்றுவிடுவார்கள். இதப்போயி ஆதரிப்பதுதான் நாட்டில் அரசியல் சூழல் கெட்டுப்போக காரணம்.


Duruvesan
ஜூன் 19, 2024 20:49

காங்கிரஸ் ஆட்சி தான் அங்க மலரும்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 19, 2024 20:27

நெறைய்ய தீம்கா சட்டமன்ற உறுப்பினர்கள், பத்து ரூவா பாலாஜி, சேக்கற பாபு எல்லாரும் கையில நெறைய்ய்ய்ய கயிறு கட்டி இருக்காங்களே, அதெல்லாம் அவுக்கனுமா கோப்பால்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி