உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெரிஞ்ச விஷயத்தை திரும்பச் சொல்வதற்கு ஆணையம் எதற்கு: கேரளாவில் எழுந்தது கிடுக்கிப்பிடி கேள்வி

தெரிஞ்ச விஷயத்தை திரும்பச் சொல்வதற்கு ஆணையம் எதற்கு: கேரளாவில் எழுந்தது கிடுக்கிப்பிடி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: 'திரையுலகில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றவாளிகளின் பெயர் இல்லாமல் ஹேமா கமிஷன் அறிக்கை முழுமை அடையாது' என பிரபல மலையாள எழுத்தாளர் சாரா ஜோசப் தெரிவித்தார்.

கமிட்டி அறிக்கை

'மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடக்கின்றன. சமரசம் செய்து கொள்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கின்றன; மறுப்பவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்' என, நீதிபதி ஹேமா கமிட்டி அளித்துள்ள அறிக்கை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த அறிக்கையில் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகள் உள்ளன. குற்றம் சாட்டுபவர் வாக்குமூலம் மட்டுமே உள்ளது; தவறு செய்தவர்களின் பெயர் விவரம் எதுவும் இல்லை.

முழுமை இல்லை

இது தொடர்பாக, பிரபல மலையாள எழுத்தாளர் சாரா ஜோசப் கூறியதாவது: குற்றவாளியின் பெயர் இல்லாமல் ஹேமா கமிஷன் அறிக்கை முழுயடையாது. அறிக்கையில் குற்றங்களுக்கு காரணமானவர்கள் பற்றி எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை. மக்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. குற்றவாளிகள் குறித்து தகவல்கள் இல்லாமல், அந்த அறிக்கை வைத்து நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. பெயர்கள் மறைக்கப்பட்டால் நீதிமன்றமோ அல்லது அரசாங்கமோ எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? இதனால் சட்ட நடவடிக்கை சாத்தியமற்றது.

உடனடி நடவடிக்கை

சினிமா துறையில் கறுப்பு பணம், மது, போதைப்பொருள் மற்றும் பாலியல் சீண்டல் ஆகியவை நமக்கு தெரிந்த பிரச்னை தான். அதற்கு காரணமான மாபியா கும்பல் குறித்து அறிக்கை தகவல் தெரிவிக்க தவறிவிட்டது. இந்தப் பிரச்னைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டியது அரசின் கடமை. குற்றங்கள் நடந்திருந்தால், நீதிமன்றங்களும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

மவுனம் ஏன்?

திரையுலகில் தொடர்புடைய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் கூட இந்த விஷயத்தில் தங்கள் பொறுப்பை மீறி மவுனம் காத்து வருகின்றனர். மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும். இதற்கு ஆறுதல் மற்றும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தால் போதாது. இந்த குற்றங்களுக்கு தீர்வு காண உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kanns
ஆக 21, 2024 11:53

All know that Cinema TV Media Politicians & Officialdoms-Professions incl Court- Judges Degenerated for Money &Luxury-Comforts.SHAME


Mr Krish Tamilnadu
ஆக 21, 2024 11:42

ஆணாதிக்க சமுதாயம். இங்கு ஆண் எனும் மனிதனின் உணர்ச்சி ஒவியம், பெண் எனும் மரக்கட்டையின் உணர்ச்சி சாதாரணம். அதிலும் படைப்பாளிகளில் ஒரு சிலர் தாங்களை கடவுளாக நினைத்து கொள்கிறார்கள். அதிலும் ஒரு சிலருக்கு யாருக்கும் தெரியாத அனைத்தையும் அர்ப்பணிக்கும் பெண் அடிமைகள் இருக்க தான் செய்கிறார்கள். 140 கோடி மக்கள் தொகை. பெண்கள் வீட்டில் மட்டும் இல்லாமல், தோள் கொடுத்து உழைக்க தான் வேண்டும், இன்றைய காலகட்டத்தில். அவர்களின் மென்மையை மட்டும் பார்க்காமல், இனி நாடு மேன்மையுற சிந்தியுங்கள் சார். அவர்களின் சுதந்திரம் நாட்டின் மற்றொரு வளர்ச்சி.


ஆரூர் ரங்
ஆக 21, 2024 10:46

தமிழ்ப்படங்களில் நடிக்க தமிழ் தெரிந்த நடிகைகள் கிடைப்பதில்லை என்று ஒரு குறை வெகு நாட்களாக உண்டு. இப்போ காரணம் புரிகிறதா?


TSRSethu
ஆக 21, 2024 10:37

பெயர் வெளியிட்டு அறிக்கை தாக்கல் செய்து அவர்களின் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்திற்கு இதெல்லாம் பெரிய விஷயமில்லை.


sridhar
ஆக 21, 2024 10:26

வீண் அறிக்கை .. காலையில் கிழக்கே சூரியன் உதிக்கிறதா ? , - ஆம் , உதிக்கிறது - பரபரப்பு அறிக்கை .


VENKATASUBRAMANIAN
ஆக 21, 2024 08:30

கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இது அதிகம். மற்ற மாநிலங்களிலும் உள்ளது. திரைத்துறையை பொறுத்தவரை இது காலம் காலமாக உள்ளது. இதை கண்டுபிடிக்க ஒரு கழு தேவையில்லை. கை புண்ணுக்கு கண்ணாடி எதற்காக


Barakat Ali
ஆக 21, 2024 07:55

மேற்குவங்க பிரச்னையைத் திசை திருப்ப பங்காளிக்கு உதவும் கேரளா ......


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை