உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹெப்பால் -- சர்ஜாபூர் மெட்ரோ ரயில் அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

ஹெப்பால் -- சர்ஜாபூர் மெட்ரோ ரயில் அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

பெங்களூரு: ஹெப்பால் -- சர்ஜாபூர் இடையில், 37 கிலோமீட்டர் துாரத்திற்கு புதிய மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான, விரிவான திட்ட அறிக்கையை, கர்நாடக அரசிடம், மெட்ரோ ரயில் நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது.பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. தற்போது செல்லக்கட்டா - ஒயிட்பீல்டு; நாகசந்திரா- சில்க் இன்ஸ்டிடியூட் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆர்.வி., ரோடு- பொம்மனஹள்ளி இணைக்கும் வகையில், மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.அந்தப் பாதையில் இந்த ஆண்டு இறுதிக்குள் ரயில் சேவை துவங்க வாய்ப்புள்ளது.இந்நிலையில், கெம்பாபுரா- ஜெ.பி. நகர் இடையில் 32.15 கி.மீ.,க்கும், ஒசஹள்ளி -கடபகெரே இடையில் 12.50 கி.மீ.,க்கும் 15,611 கோடி ரூபாய் செலவில், புதிய மெட்ரோ பாதைகள் அமைக்க, மத்திய அரசின் பொது முதலீட்டு வாரியம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் 2023- - 2024 பட்ஜெட்டில், பெங்களூரில் புதிய மெட்ரோ பாதைகள் அமைக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருந்தது.இந்நிலையில் ஹெப்பால் -- சர்ஜாபூர் இடையில் 37 கி.மீ.,க்கு 28,405 கோடி ரூபாய் செலவில், புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்க, பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, கர்நாடக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:ஹெப்பால் - சர்ஜாபூர் இடையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க, விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசிடம் சமர்ப்பித்து உள்ளோம்.அரசு ஒப்புதல் அளித்த பின்னர், மத்திய அரசின் பொது முதலீட்டு வாரிய ஒப்புதலுக்கு அனுப்பி வைப்போம்.பெங்களூரு மத்திய தொழில் மாவட்ட பகுதிகளான கோரமங்களா -- ஹெப்பால் இடையில் 16.50 கி.மீ.,க்கு சுரங்கப்பாதையில் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளோம். இதில் பெல்லந்துார், அகரா, செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை, நிமான்ஸ், மத்திய கல்லுாரி, கன்னிகாம் ரோடு, மேக்கரி சதுக்கம் ஆகிய ரயில் நிலையங்கள் வரும்.கோரமங்களா- சர்ஜாபூர் இடையில் 15 ரயில் நிலையங்கள் வரும். அரசின் ஒப்புதல் கிடைத்தபின், விரிவான திட்ட அறிக்கையில் சில மாற்றங்கள் நடக்கலாம்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி