உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் அனுப்கர் மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்ட, ரூ.60 கோடி மதிப்புள்ள 12 கிலோ ஹெராயின் போதைப்பொருளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.ஆளில்லா விமானங்கள் மூலம் பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தப் படுவதாக, எல்லை பாதுகாப்பு படையினருக்கு புகார் வந்தது. எல்லையில் போதைப்பொருட்கள் கடத்தலை முறியடிக்க, பாதுகாப்பு படை வீரர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அனுப்கர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 15) ஆளில்லா விமானத்தின் சத்தம் கேட்டு பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாகிஸ்தானில் இருந்து வந்த 2 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது.

12 கிலோ ஹெராயின்

பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் 6 கிலோ எடையுள்ள இரண்டு ஹெராயின் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் சந்தை மதிப்பு ரூ.60 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
ஜூன் 16, 2024 13:03

ராஜஸ்தானில் நடப்பது திமுக ஆட்சியா?


hari
ஜூன் 16, 2024 15:03

ராஜஸ்தானில் காசுக்காக திமுக அல்லக்கைகள் இருக்கலாம்.....


mei
ஜூன் 15, 2024 19:37

முஸ்லிம்களின் வாழ்வாதாரமே போதை பொருள் கடத்தல் தானே


P. VENKATESH RAJA
ஜூன் 15, 2024 18:41

போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி