உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டிலேயே முதல் மாநிலமாக ஆந்திராவை மாற்றுவேன்: சந்திரபாபு நாயுடு உறுதி

நாட்டிலேயே முதல் மாநிலமாக ஆந்திராவை மாற்றுவேன்: சந்திரபாபு நாயுடு உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: நாட்டிலேயே முதல் மாநிலமாக ஆந்திராவை மாற்றுவேன் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி அளித்துள்ளார்.ஆந்திரா முதல்வராக நேற்று பதவியேற்ற சந்திரபாபு நாயுடு, தன் குடும்பத்தினருடன் இன்று (ஜூன் 13) திருமலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கோயில் பிரசாதங்களை வழங்கினர். நிருபர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: 2047ம் ஆண்டுக்குள் தெலுங்கு மக்கள் உலக அளவில் முதலிடத்தைப் பெறுவார்கள். நாட்டிலேயே முதல் மாநிலமாக ஆந்திராவை மாற்றுவேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hjc6qajv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சதி

அரசியல் சதிகளை சகித்துக்கொள்ள மாட்டோம். குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. நல்லவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்வோம். கெட்டவர்களை தண்டிப்போம். மக்கள் அளித்த வெற்றியை நான் இதுவரை பார்த்ததில்லை. மாநிலத்தில் மக்கள் ஆட்சி துவங்கி உள்ளது. ஆந்திர மாநிலம் செழிக்க பிரார்த்தனை செய்தேன். மாநிலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும். இன்று முதல் நல்லாட்சி ஆரம்பமாகிறது. நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நான் நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Vijay D Ratnam
ஜூன் 13, 2024 22:11

என்னாது முதல் மாநிலமா ஆக்குவீங்களா? எப்பூடி? வாய்க்கு வந்ததை அடிச்சி விட்ட தேர்தல் வாக்குறுதியை படிச்சி பாத்துட்டு பொறவு சொல்லு மாவா. எங்க தத்தியாவது நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்னு அறிவிச்சிட்டு இப்போ நிதிக்கு நாக்கு தள்ளி போக்குவரத்து கழகத்துக்கு சமாதி கட்டிக்கிட்டு இருக்காரு. நீங்க ஒட்டுமொத்த அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்னு, பெண்களுக்கு மாசாமாசம் ரெண்டாயிரம் ரூவான்னு அள்ளிவிட்டு இருக்கீறு. ஒன்னய தெரியும் மாமோய், நீ எம்மாம் பெரிய கேப்மாரின்னு நல்லாவே தெரியும் மாமோய். இருக்க இடம் குடுத்த என்.டி.ஆர் மடத்த புடுங்குன ஆளுதான நீயு.


Ramesh Sargam
ஜூன் 13, 2024 19:42

வாக்குறுதிகள் தேவையில்லை. நிறைவேற்றிவிட்டு பிறகு பேசுங்கள். அல்லது நிறைவேற்றுங்கள், மக்கள் நாங்கள் பேசுகிறோம் உங்கள் சாதனைகளை பட்டிதொட்டியெல்லாம்.


இராம தாசன்
ஜூன் 13, 2024 19:29

சுடலையின் மைண்ட் வாய்ஸ் -இன்னாபா இது நம்ம டயலாக் இவரு சொல்லறாரு. இந்த ஆளு செஞ்சாலும் செஞ்சுடுவாரு. கட்டிங் கிட்டிங் கொடுத்து போட்ட செய்தி எல்லாம் பொய் என்று ஆகி விடுமே. என்ன செய்யலாம் - யாரங்கே கூப்பிடு நம் ஓசி சோறு தலைவரை


குப்பம் நாயுடு
ஜூன் 13, 2024 19:13

இப்பவே முதல்ல தானே இருக்கீங்க? அகர வரிசைப்படி ஆந்திராதான் முதல். கவலையை விடுங்க நாயுடு.


ஆரூர் ரங்
ஜூன் 13, 2024 16:46

மக்கள் வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு புலம் பெயராமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் படுற அவஸ்தை பிராண அவஸ்தை.


கிருஷ்ணதாஸ்
ஜூன் 13, 2024 16:21

Naidugaru has already proved his adeptitude in bringing up AP…AP is definitely going to have good times!


venugopal s
ஜூன் 13, 2024 16:12

பார்ப்போம், பொறுத்திருந்து பார்ப்போம்!


vadivelu
ஜூன் 13, 2024 17:17

வேறு வழி இல்லை வேணு, பொறுத்து இருந்து பாருங்கள், என்ன செய்ய நீங்கள் எதிர் பார்த்த மாதிரி அவர் கூட்டணி மாற இல்லை.


வாய்மையே வெல்லும்
ஜூன் 13, 2024 18:49

இலவு காத்த கிளி என்கிற படம் ரொம்ப ஜோரா இருக்கும் விடியல் குடும்பம் சமேதராக கண்டுகளிக்க வேண்டிய நல்ல திரைப்படம் .. ஹஹா ஹா


பாமரன்
ஜூன் 13, 2024 15:50

இன்னாபா சொல்றீங்கோ...... அதை திரும்ப அடையும் முயற்சியா இருக்குமோ... ??


spr
ஜூன் 13, 2024 14:18

"நாட்டிலேயே முதல் மாநிலமாக ஆந்திராவை மாற்றுவேன்" ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சியும் சொல்லும் வாக்கியம் இவையே ஆனால் உண்மையிலேயே இவருக்கு அந்த ஆசை இருக்குமானால், மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைபிடிக்காமல் ஆட்சிக்கு நயமாகப் பேசி சாதிக்க வேண்டும்


I am a Sanghi + Kafir…but not a Family slave
ஜூன் 13, 2024 16:03

கரெக்ட் நம்ம விடியல் கூட இப்படி தான் சொல்லிக்கொண்டு இருக்கார்


ram
ஜூன் 13, 2024 13:44

திருப்பதிக்கு நல்ல காலம் பொறந்துடுச்சு, அங்கு பணியில் இருக்கும் கிரிப்டோஸ் கண்டுபிடித்து அவர்களை வேற துறைக்கு மாத்த வேண்டும் உடனடியாக.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை