உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜஸ்தானில் தொடர் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ராஜஸ்தானில் தொடர் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜெய்ப்பூர்,ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. 12ம் தேதி பெய்த கனமழையால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 48 மணி நேரத்தில், மழை தொடர்பான பாதிப்புகளால் 22 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் மாலை பெய்த கனமழையால், தலைநகர் ஜெய்ப்பூரில் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.மழை நீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகரின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் அவதியடைந்தனர். பல்வேறு ரயில் நிலையங்களில் தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கின. மாநிலத்தின் மற்ற பகுதிகளில் மிதமான மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை