உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூகுள் மேப் லொகேஷனை பகிர்வது ஜாமின் நிபந்தனையா

கூகுள் மேப் லொகேஷனை பகிர்வது ஜாமின் நிபந்தனையா

புதுடில்லி :ஜாமினில் விடுவிக்கப்படுபவர், தன் இருப்பிடத்தை தெரிவிக்கும் வகையில், 'கூகுள் மேப் லொகேஷன்' பகிர்ந்து கொள்ளும் நிபந்தனைக்கு உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.வழக்கு ஒன்றில், ஆப்ரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்தவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதை விசாரித்த நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜால் புய்யான் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிக்கு, இந்த நபர் எங்கிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதற்காக, கூகுள் மேப் லொகேஷனை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை முறையானதல்ல. இந்த நிபந்தனை, அவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தை மீறுவதாக உள்ளதா என்பது குறித்து ஆராயப்படும்.இந்த வழக்கில், கூகுள் நிறுவனம் ஒரு வாதியாக இல்லை. இருப்பினும், லொகேஷன் பகிர்ந்து கொள்வது தொடர்பான தொழில்நுட்ப தகவல்களை அளிக்க அந்த நிறுவனத்துக்கு உத்தரவிடப்படுகிறது.அதுபோல, இந்த நபர் இந்தியாவை விட்டு தப்பி செல்ல மாட்டார் என்று, இந்தியாவில் உள்ள நைஜீரிய துாதரகம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. எந்த நாட்டு துாதரகமும் இதுபோன்ற உத்தரவாதத்தை அளிக்க முடியாது.இதனால், இந்த நபரை ஜாமினில் உடனடியாக விடுவிக்க வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

கல்யாணராமன் சு.
ஜூலை 09, 2024 16:20

"இந்த நபர் இந்தியாவை விட்டு தப்பி செல்ல மாட்டார் என்று, இந்தியாவில் உள்ள நைஜீரிய துாதரகம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை" என்று நீதிமான்கள் சொல்லும் அதே நேரத்தில், அந்த நபர் தப்பி செல்லாமலிருக்க என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்லவேண்டும் .... இங்கிருப்பவர்கள் வேறு யார் அந்த உத்திரவாதத்தை தருவார்கள் ?மாமியார்கள் மாதிரி செய்வதையெல்லாம் குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கக்கூடாது ... அமெரிக்காவில் எல்லாம் காலில் கழற்ற முடியாத கடயம் ankle brace போட்டுவிடுவார்கள்... அது மனித உரிமை மீறலா ?? இந்த தீர்ப்புக்கு பதிலா, ஜாமீனெல்லாம் கொடுக்காம, பேசாம ஜெயிலிலேயே வெச்சுடலாம்


Shankar
ஜூலை 09, 2024 11:14

என்ன ஒரு கேவலமான நிபந்தனை மொபைலை ஒரு இடத்தில் வைத்துவிட்டு யாரிடமாவது சொல்லி அவ்வப்போது இருப்பிடத்தை பகிர சொல்லிவிட்டு சம்பந்தப்பட்டவர் எங்கேயாவது வெளியே சுற்றமுடியாதா?


Kanns
ஜூலை 09, 2024 09:55

Sack & Punish CaseHungry Criminals Not Punishing PowerMisusing Rulers, Stooge Officials esp Police & Judges & Vested False Complainant Gangsters women, unions, SCs, advocates etc etc


N Sasikumar Yadhav
ஜூலை 09, 2024 08:41

குற்றங்கள் பெருகிவிட்டதென கோபாலபுர ஏவல்துறையை திட்டவேண்டியது. பிறகு குற்றங்களை குறைக்க ஏதாவது செய்தால் அதை தடுக்க வேண்டியது. இவ்வளவு தரம் தாழ்ந்து போக என்ன அவசியம் வந்தது


Nandakumar Naidu.
ஜூலை 09, 2024 07:42

தீவிரவாதிகளுக்கு, குற்றவாளிகளுக்கு துணைபோகும் நீதிமன்றங்கள். வெட்கப்பட வேண்டிய ஒன்று.


Kasimani Baskaran
ஜூலை 09, 2024 05:32

வெளிநாட்டினர் அல்லது தப்பிச்செல்ல வாய்ப்புள்ள குற்றம்சாட்டப்பட்டவர் என்றால் ஜிபிஎஸ் கருவியை காலில் அல்லது கழுத்தில் கட்டி அதை காவல்துறை கட்டுப்பாட்டு அறை கண்காணிக்கும். இதில் தனிப்பட்ட சுதந்திரம் எப்படி பாதிக்கப்படும்?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை