உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜக்தீப் தன்கரை பதவி நீக்க வேண்டும்: 87 ராஜ்யசபா எம்.பி.க்கள் கையெழுத்து?

ஜக்தீப் தன்கரை பதவி நீக்க வேண்டும்: 87 ராஜ்யசபா எம்.பி.க்கள் கையெழுத்து?

புதுடில்லி: ராஜ்யசபாவில் எதிர்கட்சி எம்.பி.க்களிடம் மரியாதை குறைவாக பேசியதாக ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய கோரி நோட்டீஸ் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஆதரவாக பேசிய பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும், நடிகையும், சமாஜ்வாதி எம்.பி.,யுமான ஜெயா பச்சனுக்கும், சபை தலைவர் ஜக்தீப் தன்கருக்கும் இடையே நேற்று காரசாரமான விவாதம் நடந்தது.அப்போது பேசிய ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர், நீங்கள் ஒரு பிரபல நடிகையாக இருக்கலாம். ஆனால் சபையின் நடவடிக்கைகளை புரிந்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு நற்பெயர் உள்ளது.நடிகர் என்பவர் இயக்குனருக்கு உட்பட்டவர் என்பது உங்களுக்கு தெரியும். எனக்கு யாரும் பள்ளிப் பாடம் நடத்த வேண்டாம். போதும்... போதும் என்றார்.இதனால் அதிருப்தி அடைந்த ஜெயா பச்சன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், காங்., மூத்த தலைவர் சோனியா தலைமையில், ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி எம்.பி.,க் களை ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் மரியாதை குறைவாகப் பேசுகிறார். அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும், பேசும் விதமும் ஏற்க முடியாதவை. தடை செய்யப்பட்ட வார்த்தைகளை பேசிய ஜக்தீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய கோரி 80-க்கும் மேற்பட்ட ராஜ்யசபா எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது, இந்திய அரசியல் சாசனம் 1950 கோட்பாடு 67(ஆ)ன் கீழ் ராஜ்யசபா கவுன்சிலின் தீர்மானத்தின் மூலம் பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ராஜ்யசபா தலைவரை நீ்க்க முடியும். முன்னதாக தீர்மானம் கொண்டு வர ராஜ்யசபா தலைவருக்கு 14 நான்கு நாட்களுக்கு முன் அறிவிப்பு நோட்டீஸ் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

RAMESH
ஆக 11, 2024 06:38

சினிமா நடிகையை சுதந்திர போராட்ட வீரங்கனை என்றா கூற முடியும்.....சேமியாவின் அலப்பறைகள்


ray
ஆக 12, 2024 19:32

நடிகையை வெளிநாட்டில் சந்தித்து பேசினா பிரதமர் மறந்து போனதா ? இன்று அவரும் ஒரு அவை உறுப்பினராகியுள்ளாரே


Karthikeyan
ஆக 10, 2024 18:56

ஜக்தீப் தன்கர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்...அதிகாரத்திலிருந்துவிட்டு இப்போ சும்மா இருக்கிறதனால ஏதாவது குழப்பம் விளைவிக்க காங்கிரஸூம் அதனோட கூட்டணி களவாணிகளும் முயற்சி பண்ணுகிறார்கள்...இனி ஐந்து வருஷங்களுக்கு ஒரு மயிரையும் புடுங்க முடியாது...


Swaminathan L
ஆக 10, 2024 18:38

இண்டி கூட்டணி மொத்தமும் கையெழுத்திட்டாலும் எதுவும் நடக்காது, பெரும்பான்மை இல்லாததால். இந்த விஷயத்தில் அவையில் விவாதம் என்று வந்தால் இண்டி கூட்டணிக்கும் கஷ்டம் மட்டுமல்ல நஷ்டமும் ஏற்படும்.


Sri DMK_Literary
ஆக 10, 2024 15:31

தங்கர் மம்தாவிற்கு கொடுத்த தொல்லைகளுக்கு பரிசாக வந்து இப்பதவி. ராஜ்யசபா உறுப்பினர்கள் இவருக்கெல்லாம் பயப்பட மாட்டார்கள்.தன்கர் தன்னை திருத்திக்கொள்ள டச்சுப்.


Soorya
ஆக 10, 2024 11:58

கருத்து சுதந்திரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று சொல்லிக்கொண்டு அவை மாண்பை கொடுப்பதற்கு இவர்கள் கூட்டம் சேர்க்கிறார்கள். மாண்புமிகு துணை ஜனாதிபதி இவர்களை கையாண்ட விதம் சரிதான்.


P. Siresh
ஆக 10, 2024 10:39

சென்ற வாரம் தன்கர் அவையில் கை கோப்பி வணங்கி உறுப்பினர்களிடம்,கார்கேவிடம் அமைதி காக்க வேண்டும்.என்று கேட்டுக்கொண்டார்.மிகவும் பணிவுடன் அவையை நடத்துகிறார். ஜய பச்சன் குடும்ப பிரச்சனையை அவையில் கோபத்தை காட்டுவது ஏற்புடையதல்ல.


karunamoorthi Karuna
ஆக 10, 2024 09:16

புருஷன் பெயரை சேர்த்து ஜெயா அமிதாப் பச்சன் என்று சொல்லி கூப்பிட்டதால் வந்த பிரச்சினை அந்த கூத்தாடி ஏன் ஜெயா அமிதாப் பச்சன் என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்டாள் ஆவணங்களில் ஏன் ஜெயா அமிதாப் பச்சன் என்று குறிப்பிட்டாள்


Sck
ஆக 10, 2024 09:01

முதலில் அந்நாள் நடிகைதான், தான் நடிகை, தனக்கு அடுத்தவர்கள் பேசும் வசனமும், அங்க அசைவும் நன்றக தெரியும் என்றார், அதற்கு நமது நாட்டின் துணை ஜனாதிபதி எல்லா நடிக, நடிகையரும் ஒரு இயக்குநருக்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும் என்றார. என்ன தவறு.


neelakandan yadav
ஆக 10, 2024 07:55

குட்


Balasubramanian
ஆக 10, 2024 06:34

ஜகதீப் தங்க்கரை குறை கூற இயலாது! ஆழ்ந்த படிப்பாளி மற்றும் பல ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி கவர்னராகவும் இருந்தவர்! வாய்க்கு வந்தபடி பேசும் இன்றைய அரசியல் வாதிகள் முன் ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும், திருக்குறள் 763 கூட்டமாக வரும் எலிகளின் கொட்டத்தை பாம்பு சீறி ஒடுக்குவதை போல- நடந்து கொள்ள வேண்டிய நிலை அவருடையது ! இங்கு அமர்ந்து பார்த்தால் தெரியும் என்று சீறினார்


Ravi Ganesh
ஆக 10, 2024 10:29

நீங்கள் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என நினைத்து ஒரு சார்பு கருத்து கூறுவதை நிறுத்துங்கள். மக்கள் தராசு முள் போல் நடுநிலை தவறாது கருத்து தெரிவிக்க வேண்டும். ஜெகதீப் தங்கர் ஒரு பக்க சார்பு நிலை எடுப்பது தவறு. அவர் பொதுவானவராக செயல் படுவதே அவரது பதவிக்கு அழகு. ஒரு பிஜேபி ஆதரவாளராக, முன்னாள் நிர்வாகியாக நான் இதை சொல்கிறேன்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி