உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால் தான்: சி.பி.ஐ., குற்றச்சாட்டு

முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால் தான்: சி.பி.ஐ., குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ., இன்று (ஜூலை 29) டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால் தான் என சி.பி.ஐ., குற்றம் சாட்டியுள்ளது.மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கடந்த மார்ச் 21ம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்க துறை கைது செய்தது. அமலாக்க துறை என்னை கைது செய்தது சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூலை 12ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் அளித்தது. சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கினாலும், இன்னொரு வழக்கில் அவரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது. இதனால் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. அவருக்கு கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குற்றச்சாட்டு

இந்நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ., இன்று (ஜூலை 29) டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகையில், ‛‛ இந்த வழக்கில் முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால் தான். அவர் டில்லி மதுபான கொள்கையை வகுத்து செயல்படுத்தியதற்காக பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். டில்லி அரசின் அனைத்து முடிவுகளும் அவரது வழிகாட்டுதலின்படி மட்டுமே எடுக்கப்பட்டன. மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுடன் கெஜ்ரிவால் தொடர்பில் இருந்துள்ளார்'' என சி.பி.ஐ., குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

JEBASINGH SUTHAHAR BABU J
ஜூலை 30, 2024 08:13

எல்லா பெட்டிகடைகள் முதல்கொண்டு போதைபொருள்கள் தாராளமாக விற்பனை செய்ய அனுமதிக்கும் மத்திய- மாநில அரசுகளை கலைத்துவிட வேண்டும்.


Azar Mufeen
ஜூலை 30, 2024 00:16

அமெரிக்காவில் 8500கோடி சுருட்டிய குஜராத்காரர் போன்ற புனிதர் அளவுக்கு இல்லை


S.Govindarajan.
ஜூலை 29, 2024 22:17

போதைப் பொருள் கடத்தல் புகழ் ஆட்கள் புனிதர்களா ?


Azar Mufeen
ஜூலை 29, 2024 17:17

இவர் சதிகாரர் என்றால் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் புனிதர் அப்படித்தானே


தஞ்சை மன்னர்
ஜூலை 29, 2024 16:22

வாங்கிய கோடிகளை எங்கே வைத்து இருக்கார் என்று சொல்லமுடியுமா அமலாபால் துறை மற்றும் சி பி ஐ ஏன் கேக்குறேன் இப்படித்தான் சொல்லி 174 லட்சம் கோடியை இழப்பு ஏற்படுத்திவிட்டார்கள் என்று இதே பி சே பி சொல்லிக்கொண்டு இருந்தது அதற்க்கு இப்போது வரை விடை தெரியவில்லை


SP
ஜூலை 29, 2024 14:40

இந்த நபரை வெளியில் விடவே கூடாது வழக்கு மேல் வழக்கு போட்டு காலம்முழுக்க உள்ளேயே வைத்திருக்க வேண்டும்.அவரது வெளிநாட்டு தொடர்புகளையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும்


S S
ஜூலை 29, 2024 16:49

ஆமாம். இவரை வெளியேவிட்டால் குஜராத்திலும் ஆட்சியை பிடித்துவிடுவார். எனவே அடுத்தடுத்து கேஸ் போட்டு இவரை உள்ளேயே வைத்திருக்க வேண்டும்


JeevaKiran
ஜூலை 29, 2024 14:36

அப்போ, மது உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், லஞ்சம் கொடுத்தவர்கள் இவர்களையெல்லாம் என்ன செய்தது இந்த சிபிஐ ?


Swaminathan L
ஜூலை 29, 2024 14:30

வாட்டர் டைட் ஆதாரங்கள் கொண்டு இந்த வழக்கை நடத்தி கெஜ்ரிவால் மற்றும் அவர் அணுக்கர்களை பல ஆண்டுகள் உள்ளே தள்ள வேண்டும். இவர் மற்றும் இவருடைய நெருங்கிய சகாக்களின் அரசியல் பிரவேசம் மற்றும் அதிகாரம் பெறுதலில் வெளி தேச அதிகார மையங்களின் பங்களிப்பு இருப்பதாக சில ஆண்டுகளாகவே பேச்சு.


Indhuindian
ஜூலை 29, 2024 13:54

அந்த ஹனிபா குரல்ல தமிஷ் பாட்டை ஹிந்தியில் யாரவது மொஷி பெயர்த்து பாருங்கப்பா


GMM
ஜூலை 29, 2024 13:52

ஊழல் குற்றச்சாட்டு உண்மையான விவரங்கள் அடிப்படையாக கொண்டது. முதல்வருக்கு தெரியாமல் ஊழல் கொள்கை வகுத்து, அரசுக்கு இழப்பு ஏற்படுத்த முடியாது. கெஜ்ரிவால் தான் முதல், முக்கிய குற்றவாளி. விசாரணை அமைப்புகள் உழைப்பை அரசியல் கண்ணோட்டத்தில் அணுகினால், நீதியை நிலை நிறுத்த முடியாது.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ