உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி, பஞ்சாபில் ஆம்ஆத்மி ஆட்சியை கவிழ்க்க சதி: கெஜ்ரிவால்

டில்லி, பஞ்சாபில் ஆம்ஆத்மி ஆட்சியை கவிழ்க்க சதி: கெஜ்ரிவால்

புதுடில்லி: டில்லி மற்றும் பஞ்சாபில் ஆம்ஆத்மி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என பா.ஜ., சதி திட்டம் தீட்டியது. ஆனால் அந்த திட்டம் படுதோல்வி அடைந்தது என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.திஹார் சிறையில் இருந்து ஜாமினில் வெளிய வந்துள்ள முதல்வர் கெஜ்ரிவால் ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கெஜ்ரிவால் கூறியதாவது: நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. நான் சிறையில் இருக்கும் போது டில்லி மக்களுக்கு மருத்துவ வசதி, மின்சாரம் மற்றும் தண்ணீர் கிடைப்பதில் ஏதேனும் பிரச்னைகள் வந்து விடுமோ என்று நான் கவலைப்பட்டேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2idzht85&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பா.ஜ., சதி திட்டம்

மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால் அதை பா.ஜ.,வினர் அரசியல் ஆக்குவார்கள். தேர்தலுக்கு இடையில், என்னை கைது செய்தனர். ஆனாலும் ஆம்ஆத்மி கட்சி மேலும் வலுப்பெற்றுள்ளது. டில்லி மற்றும் பஞ்சாபில் ஆம்ஆத்மி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என பா.ஜ., சதி திட்டம் தீட்டியது. ஆனால் அந்த திட்டம் படுதோல்வி அடைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

10 உத்தரவாதங்கள் என்னென்ன?

பின்னர் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் மற்றும் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது கெஜ்ரிவால் கூறியதாவது: எனது கைது காரணமாக உத்தரவாதங்கள் அளிக்க தாமதமானது. * நாட்டில் 24 மணி நேர மின்சாரம் வழங்குவோம். நாட்டில் 3 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. ஆனால் 2 லட்சம் மெகாவாட் மட்டுமே தேவைப்படுகிறது. ஏழை எளிய மக்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். * நமது அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த கல்வி கிடைக்கவில்லை. அனைவருக்கும் நல்ல சிறந்த இலவசக் கல்வியை ஏற்பாடு செய்வோம். தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் சிறந்த கல்வியை வழங்கும்.

நல்ல சிகிச்சை

* அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் நல்ல சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வோம். ஒவ்வொரு கிராமத்திலும் கிளினிக்குகள் திறக்கப்படும். * சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்திய நிலங்களை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ள ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும்.* அனைத்து ராணுவ வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு பழைய நடைமுறைப்படியே செய்யப்படும். அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்பட்டு, இதுவரை பணியமர்த்தப்பட்டவர்களை தீயணைப்பு வீரர்களாக்குவோம்.

மாநில அந்தஸ்து

* வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொண்டு வரப்படும்.* டில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவோம்.* ஓராண்டில் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.* நேர்மையானவர்களை சிறைக்கு அனுப்பும் முறையும், ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் முறையும் ஒழிக்கப்படும்.

ஜி.எஸ்.டி., வரி

* வர்த்தகம் மற்றும் தொழில்துறையை பெரிய அளவில் ஊக்குவிக்க அனைத்து சட்டங்களும் நிர்வாக அமைப்புகளும் எளிமைப்படுத்தப்படும். ஜி.எஸ்.டி., வரி அகற்றப்படும். இந்த 10 உத்தரவாதங்கள் அனைத்தும் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றப்படும் என நான் உறுதிசெய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தாமரை மலர்கிறது
மே 12, 2024 21:17

தேர்தல் முடிந்தவுடன் கெஜ்ரியின் ஆசையான டெல்லி மற்றும் பஞ்சாப் அரசு கலைக்கப்படும் கூடவே திமுக அரசும் போனஸாக கலைக்கப்படும் கவலை வேண்டாம்


M Ramachandran
மே 12, 2024 19:39

இவர வெளியில் விட்டாச்சி தானெ இனி தினமும் ஒரு மூட்டை அவிழ்த்து விட்டு கொண்டே இருப்பார் டில்லி மக்கள் யோசிக்காமல் செய்த காரியத்துக்கு பட்டு தான் ஆக வேண்டும்


தமிழ்வேள்
மே 12, 2024 19:18

அத்தைக்கு மீசை முளைத்தால் தானே சித்தப்பா ஆக முடியும்?


என்றும் இந்தியன்
மே 12, 2024 18:20

இதிலிருந்து இப்போதாவது புரிகின்றதா உச்ச நீதிமன்றமே???இவ்வளவு கேவலமான ஜாமீன் உலகம் பூராவும் ஒரு நீதிமன்றம் நிச்சயமாக கொடுக்க முடியாது


Palanisamy Sekar
மே 12, 2024 16:41

பெயிலில் இருப்பதால் தன்னை உத்தமன் போல காட்டிக்கொள்கின்ற இந்த ஊழல் பேர்வழி தனது வீட்டு புதுப்பிக்க நூறுகோடிக்கு செலவு செய்ததாக கட்டியுள்ளார் உண்மைத்தன்மை உள்ளது அதனால் சட்டத்தின் முன்னர் தண்டிக்கப்பட்ட ஆகணும் அப்போது மக்களுக்கு உண்மை தெரியும் கடந்த ஐம்பது நாட்களாக ஜெயிலில் இருந்ததால் பொய் பேசாமலிருந்து இப்படி ஆகிவிட்டார்


M S RAGHUNATHAN
மே 12, 2024 16:00

ஒரு மாநில முதல்வர் அவர் அலுவலகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை இதை விட அவமானம் தேவையா


R.MURALIKRISHNAN
மே 12, 2024 15:19

அந்த மாநில மக்கள் சந்தோஷப்படுவர் கெஜ்ரிவால் அவர்களே | நீங்கள் பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்த ஒரு ஊழல்வாதி தலைவன்


ஆரூர் ரங்
மே 12, 2024 15:18

கைது செய்ததே செல்லாது என்று வழக்குப் போட்ட இவருக்கு ஜாமீன் கொடுத்ததன் மூலம் கோர்ட் கைதை நியாயப் படுத்தி விட்டது. தன்னை கோர்ட் வழக்கிலிருந்து விடுவித்துவிட்டதாக கதை விட்டுத் திரிகிறார்.


Kumar Kumzi
மே 12, 2024 14:59

கொசுரிவாலு ஐயா உங்க தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆவியாத அவியலை ஏன் கூப்பிடவில்லை


Duruvesan
மே 12, 2024 14:40

இவன் நேர்மை ஆனவன், அதான் கோர்ட் ரிலீஸ் பண்ணாம பெயில் குடுத்து இருக்கு தோத்தவுடன் கோர்ட் சிபிஐ ED EC EVM மீடியா எல்லாம் செய்த சதின்னு கூவுவான்


மேலும் செய்திகள்



புதிய வீடியோ