உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைமை தேர்தல் அதிகாரியை விமர்சித்த கேரள துணை தாசில்தார் சஸ்பெண்ட்

தலைமை தேர்தல் அதிகாரியை விமர்சித்த கேரள துணை தாசில்தார் சஸ்பெண்ட்

மூணாறு:கேரளாவில் தலைமை தேர்தல் அதிகாரியை விமர்சித்து 'பேஸ் புக்' கில் பதிவிட்ட துணை தாசில்தார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் மீட்பு பிரிவில் துணை தாசில்தார் ஷிமி. இவர் கேரள தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் எம். கவுல் குறித்து அவரது புகைப்படத்துடன் 'பேஸ் புக்' கில் கடுமையாக விமர்சித்தார்.அவருக்கு முன் அனுபவம் இல்லாததால் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவில் கால தாமதம் ஏற்பட்டதாக பதிவிட்டார். அது குறித்து கேரள மாநில சட்ட உதவி அமைப்பின் திருச்சூர் மாவட்ட தலைவர், தேர்தல் கமிஷன் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ்க்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் ஷிமி , இப்பிரச்னையில் 'பேஸ் புக்' மூலம் விமர்சித்ததாகவும், அவர் அரசின் கொள்கைகளுக்கு எதிராக முன்னர் பல முறை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும் தெரியவந்தது. அதுகுறித்து ஷிமியிடம் விளக்கம் கேட்ட நிலையில் அவரை தலைமை தேர்தல் அதிகாரி 'சஸ்பெண்ட்' செய்தார். அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யுமாறும் கலெக்டருக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி