உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி ராமர் கோவிலில் கேரள கவர்னர் வழிபாடு

அயோத்தி ராமர் கோவிலில் கேரள கவர்னர் வழிபாடு

அயோத்தி : அயோத்தி ராமர் கோவிலில், கேரள கவர்னர் ஆரிப் முஹமது கான் நேற்று சாமி தரிசனம் செய்தார்.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவிலுக்கு, கடந்த ஜனவரி 22ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, அங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், அக்கோவிலில் கேரள கவர்னர் ஆரிப் முஹமது கான் நேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது, ராமர் சிலை முன் கீழே மண்டியிட்டு அவர் வணங்கினார். அதன்பின் கவர்னர் ஆரிப் முஹமது கான் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த ஜனவரி மாதம், இங்கு நான் இரு முறை வந்தேன். அப்போது ஏற்பட்ட அதே அனுபவம் இன்றும் எனக்கு கிடைத்தது. பலமுறை இங்கு வந்தாலும் இதே அனுபவத்தை நான் உணர்வேன். அயோத்தியில் ராமரை வழிபடுவது, நமக்கு மகிழ்ச்சியை மட்டுமின்றி, பெருமைக்குரிய விஷயமாகவும் கருதுகிறேன்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sankaranarayanan
மே 09, 2024 19:22

இந்துக்களையே இந்துமத கோயில்களுக்குள் செல்ல பல தடைகள் விதிப்பது இந்துமத கோட்பாடுகளை அவமதிப்பது இந்துமதத்தையே கேவலமாக சித்தரிப்பதெல்லாமே இந்த திராவிட மாடல் அரசுதான்


M S RAGHUNATHAN
மே 09, 2024 16:07

வடநாட்டு கோயில்களில் எவர் வேண்டுமானாலும் செல்லலாம்


Sankaran
மே 09, 2024 15:44

மாற்று மதத்தினர் இந்து மதத்தை மதிக்கிண்றனர் ஆனால் திராவிட model அரசு, வாக்களித்த இந்து மக்கள் கதற கதற வைக்கிறது வருத்தம் அளிக்கிறது


Velan Iyengaar
மே 09, 2024 12:11

மாற்று மதத்தினர் ராமர் கோவிலுக்கு உள்ளே அனுமதிக்கப் படுகிறார்களா??


மேலும் செய்திகள்





புதிய வீடியோ