உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் பயங்கரவாத தடுப்புக்காவல் ஓராண்டு நீட்டிப்பு

காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் பயங்கரவாத தடுப்புக்காவல் ஓராண்டு நீட்டிப்பு

திப்ருகர்: அசாம் சிறையில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால்சிங் , பயங்கரவாத தடுப்பு காவல் சட்டத்தின் கைதுசெய்யப்பட்டதை மேலும் ஓராண்டு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக இருப்பவர் அம்ரித்பால்சிங். பஞ்சாப் வாரியர்ஸ் என்ற அமைப்பு நடத்திவருகிறார். கடந்த 2023ம் ஆண்டு பயங்கர ஆயுதங்கள், நவீன துப்பாக்கிகளுடன் போலீ்ஸ் நிலையத்திற்குள் புகுந்து போலீசாரை மிரட்டியவழக்கில் 2023 ஏப்ரலில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அசாம் மாநிலம் திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலம் கஹாதூர் ஷாஹிப் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு சுயேட்சை எம்.பி., ஆக உள்ளார்.இந்நிலையில் அம்ரித்பால் சிங் பயங்கரவாத தடுப்புக்காவல் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடடைகிறது. இதையடுத்து அவர்மீதான பயங்கரவாத தடுப்புக்காவலை மேலும் ஓராண்டு நீட்டித்து உத்தவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anbuselvan
ஜூன் 20, 2024 00:13

தீவிரவாதிகள் தேர்தலில் நிற்க அனுமதிப்பதும், நாட்டின் முன்னாள் பிரதமரை கொன்றவர்களை தூக்கிலிடாமல் விடுதலை செய்வதும் இந்தியாவில்தான் நடக்கும். ஜனநாயகத்தின் குறைபாடுகளில் இதுவும் ஒன்று


V RAMASWAMY
ஜூன் 20, 2024 18:51

You have said what others want to say. Absolutely right.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை